'வரலாறு' படத்தைப் பார்க்காது அஸினைத் தவறவிட்டுவிட்டேன், அந்த தவறை இன்னொருமுறை விடக்கூடாது என்று பாவனாவைப் பார்ப்பதற்காய் 'கிழக்குக் கடற்கரைச்சாலை' படம் பார்க்கத் திரையரங்கிற்கு நேற்றுச் சென்றிந்தேன்.
என்னவொரு அற்புதமான படம். தமிழ்ச் சினிமாவின் இன்னொரு மைற்கல் அது. உலகச்சினிமாத் தரத்திற்கு தமிழ்த்திரையை உயர்த்திவிடும், எவரும் தவிர்க்காது பார்க்கவேண்டிய வர்ணச்சித்திரம். ஈவ்-ரீஸிங் போன்றவற்றை just like that மாதிரி எடுக்கவேண்டும் என்ற அறிவுரை கூறும் அருமையான படம். நாயகன் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை செய்வது அந்த நல்ல காரியத்தைத்தான். அடுத்த ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கப் பயமாயிருக்கிறது. பாலியல் வன்புணர்வையும் just like that மாதிரி எடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
படத்தின் நாயகனைப் பார்த்து, 'உனக்கு லூசா லூசா'? என்று பாவனா அடிக்கடி கேட்பார். முதலில் விளங்கவில்லை, ஏன் இப்படி பாவனா கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்று. பிறகுதான் நன்கு விளங்கியது. பாவனா நாயகனைக் கேட்கவில்லை, திரையிலிருந்து படம் பார்க்க வந்த எங்களைப் பார்த்துத்தான், இப்படியொரு அற்புதமான படத்தைப் பார்க்க வந்த 'நீங்கள்தான் லூசு லூசு' என்று சொல்லியிருக்கின்றார் போலும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று திரையரங்குச் சென்ற எங்களை -இந்த சனியையும் இழவுச் சனியாக மாற்றி- இரத்தக்கண்ணீர் வரச்செய்துவிட்டார்கள். நகைச்சுவை என்றபெயரில் கோமாளித்தனம் காட்டுவது போதாது என்று கூடவே வாயால் டமாரமடித்து செவிப்பறையை நோகவைத்து தலையிடியைத்தான் வரச்செய்து கொண்டிருந்தார்கள். வந்த விசருக்கு எப்படி திரைச்சீலையைக் கிழிக்காமல் சும்மா வந்தோம் என்று நினைக்க இன்னும் வியப்பாய்த்தானிருக்கிறது.
'சித்திரம் பேசுதடி'யே பார்த்துவிட்டு அஸினை 'கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய்' என்று கூறிவிட்டு, பாவனாவை பீடத்தில் ஏற்றிவைப்போம் என்று எண்ணியிருந்தேன். இனி 'நான் கடவுள்' வரும் வரை அந்த முடிவை பரிசீலனை செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருக்கின்றேன்.
இந்த லூசுப்படத்தைப் பற்றிய லூசுப் பதிவை வாசிக்க வந்த நீங்களும் லூசாக ஆகக்கூடாது என்பதற்காய் இடைக்கிடை பாவனாவைச் சிரிக்கவைத்திருக்கின்றேன். ஆகவே தயவுசெய்து என்னைத் திட்டாதீர்கள் :-).

10 comments:
சேச்சியிண்ட படங்களை போட்டதற்கு நன்றி.
பெத்த ராயுடு,
நம்மைப்போலவே இன்னொருத்தர் :-).
\\இந்த லூசுப்படத்தைப் பற்றிய லூசுப் பதிவை வாசிக்க வந்த நீங்களும் லூசாக ஆகக்கூடாது என்பதற்காய் இடைக்கிடை பாவனாவைச் சிரிக்கவைத்திருக்கின்றேன். ஆகவே தயவுசெய்து என்னைத் திட்டாதீர்கள் :-). \\ intha padatha patri elluthina umaku losa endu kepam endu ninachan neer munthideer.apa asin a thalli vaikeleya?
//அஸினை 'கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய்' என்று கூறிவிட்டு,//
நீர் பாவனாவுக்காண்டிப் போனீரெண்டு தெரிஞ்சா அசின் பாவமென்ன!! :O)
ஸீரோவுக்கு என்னத்துக்குக் கோவம் வருதெண்டே தெரியேல்ல.. எதுக்கு சுரேஷ்ட நடிப்பை வீணடிக்கோணும் என்டும் விளங்கேல்ல! அசல் தமிழ் ப(ப்ப)டம்! "நல்லபடம்.. பாருங்க" என்டு சொன்ன ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறன்.. அடுத்த BBQல போட்டு ரோஸ்ட்டுறதுக்கு! Grr..
முழுப்படமும் பாத்தனீங்களோ? நான் அந்தளவுக்குப் பாவஞ் செய்யல்ல. __/\__
//லூசுப்படத்தை//
லொஜிக் என்டதை கூவிக் கூவி வித்தாலும் வாங்காயினம்! :O))
சினேகிதி, ஷ்ரேயா: அஸினை இப்போதைக்கு விட்டுக்கொடுப்பதாயில்லை :-).
// வந்த விசருக்கு எப்படி திரைச்சீலையைக் கிழிக்காமல் சும்மா வந்தோம் என்று நினைக்க இன்னும் வியப்பாய்த்தானிருக்கிறது. //
டிசே, இந்த மாதிரியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டா அப்பறமா எந்த தமிழ்ப்படத்தையும் பார்க்கமுடியாது.. சொல்லிட்டேன்! :)
பாவனா படத்துக்கு இடையில் சில எழுத்துகளையும் போட்டிருந்தியள்.
கடந்த மாதத்தில் பாவனாவைச் சந்திக்கும் நிலையொன்று ஏற்பட்டது. அப்போது நீங்கள் பாவனா ரசிகர் எண்டது எனக்கு தெரியாமல் போய்விட்டது. இனியொருதரம் சந்தர்ப்பம் வாய்த்தால் உங்களைப் பற்றி சொல்லுறன். சரி தனிமடலில் பாவனாவின் தனி கைபேசி இலக்கம் அனுப்புகிறேன் அடிகடி பேசி அறுக்காமல் ஒருதடவை மட்டும் நம்ம பாவனா கூட பேசுங்க .
பின்நவீனத்துவ தமிழ் சினிமாக்கள் பற்றி உங்களுக்கு சரியான புரிதல் இல்லை.
//கடந்த மாதத்தில் பாவனாவைச் சந்திக்கும் நிலையொன்று ஏற்பட்டது//
பாவனாவைப் பொறுத்தவரை அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலை.
இளவஞ்சி: கூட உணர்ச்சிவசப்படக்கூடாது என்றுதான் இந்தப்படத்திற்குப்பிறகு தமிழ்த்தியேட்டர் பக்கம் இன்னும் தலைகாட்டவில்லை. :-).
............
சோமி, பாவனா சேச்சி தமிழ் பறையுமோ :-)?
......
அநாமதேய நண்பர் :-)).
\\சோமி, பாவனா சேச்சி தமிழ் பறையுமோ :-)?\\
பாவனா சேச்சி கொறச்சு கொறச்சு தமிழ் பறயும்...பேட்டி ஒன்றீல் பாரத்தேன்.
Post a Comment