கால் இறுதி ஆட்டத்தில் நேற்று ஆர்ஜென்ரீனா தோற்க, இன்று பிரேசிலும் தோற்றுப்போய்விட இனி வரும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டங்களைச் சுவாரசியமாய்ப் பார்க்கும் விருப்பும் போய்விட்டது :-(.
நேரமில்லாமல் இன்றுவரை முழுமையாக ஒரு ஆட்டத்தை பார்க்க முடியாமற் போனது; ஃபிரான்ஸ்/ப்ரசில் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தேன். ஃபிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றியடைந்திருக்க வேண்டும்.
4 ஐரோப்பிய அணிகள் பங்கு பெறும் அரையிறுதி ஆட்டங்களை பார்க்க முயல வேண்டும். ஃபிரான்ஸ் கோப்பையை வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. .... பிரேஸில் கொடியை காரில் கட்டிக்கொண்டு திரிந்தவனுக்கு, பிரேஸிலுக்கு அடுத்து ஆர்ஜெண்ரீனாவுக்குத்தான் ஆதரவு என்று அவர்களின் ஜேர்ஸியோடு அடிக்கடி வெளியே திரிந்தவனுக்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகள் இல்லையென்றால்.... :-(((. ..... நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா தோற்றுப்போனாலும் அருமையான ஆட்டத்தை ஆடியிருந்தனர் (ஆட்டத்தை வைத்துப்பார்த்தால் வென்றிருக்கவேண்டியவர்களும்அவர்களேதான்). ஆனால் இன்று பிரேஸில் ஆடிய ஆட்டம் மிக மோசமானது. அதேவேளை -வயதுபோனவர்களின் அணி - என்று விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பிரான்ஸ் ஒரு ப்னீக்ஸ்யாய் எழுந்துவந்து மிக அருமையாக ஆடியிருந்தனர். ..... இப்போதைக்கு பிரான்ஸோ அல்லது போர்ச்சுக்கல்லோ கிண்ணத்தை வென்றால் நன்றாகவிருக்கும் போலத்தோன்றுகின்றது.
//"இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை" // எனக்கும் தான் ஐசே.
//பிரேஸிலுக்கு அடுத்து ஆர்ஜெண்ரீனாவுக்குத்தான் ஆதரவு என்று //
அடடே, நானும் அப்பிடித்தான். சிலதரப்புக்கள், காரண காரியங்களைக் கடந்து நிரந்தரமாகப் பிடித்துப்போய் விடுகின்றன. இவற்றைக் கடந்து ஐரோப்பிய அணிகளுக்குள் ஜேர்மன் பிடிக்கும். ஏனென்று தெரியவில்லை.
//இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை//அதே அதே! பிரேசில் இவ்வளவு மோசமாக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பிடிக்கிறதோ இல்லையோ மிச்சமுள்ளவற்றைப் பார்த்துத்தானே தீருவோம்.
என்னைப்போலவே நிறைய பிரேஸில் இரசிகர்கள் இருக்கின்றார்கள் போல :-). உலகக்கிண்ணத்தை வென்றபின் ஒரு வெற்றிப்பதிவு போடவேண்டிய நாமெல்லாம் கால் இறுதியோடே அழவேண்டியதாய் போய்விட்டதே ;-(
பிரேசில் ஜெயித்துவிடவேண்டும் என நாம் நினைப்பது, எமது பின்புலத்தினை அடிப்படையாக கொண்டதுடன், அவர்கள் இயல்பாக கால்பந்தாட்டத்தின் நிபுணர்கள் என்பதால் அவர்களின் விளையாட்டில் தனித்துவமும், சுறுசுறுப்பும் உண்டு. இன்றும் கூட ஏனைய நாடுகளுடன் விளையாடும் போது லத்தீன் அமெரிக்கா நாடுகள் ஜெயிக்க வேண்டும் என நினைத்திருப்பேன். ஆனால், பிரான்சுடன் விளையாடும் போதுமட்டும், பிரான்ஸ் ஜெயித்துவிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அது ஒரு ஒருமித்த உலகத்தின் தன்மையை (பிரெஞ்சு ரீம்) கொண்டிருக்கிறது. பூர்வீக ஆப்பிரிக்க, அராபிய, இந்திய, ஜரோப்பிய இளைஞர்களையும் அது கொண்டிருப்பதால் அது ஒரு உலக ஒருமைப்பாட்டின் வெளிப்படையாக இருக்கிறது. இதை ஒழுங்கு படுத்தியற்காக 98 ம் ஆண்டு அதன் கோச் வலது சாரிகளால் தாக்குதலுக்கே உள்ளாக்கப்பட்டார். அவரை எல்லோருமே ஏசினார்கள், இறுதிவரை அந்த முடிவை அவர் மாற்றாததுடன், ஜெயிக்க வைத்தும் காட்டினார். இன்றும் அவரின் தேர்வு சரியானது என்பதைக்காட்டியிருக்கிறது. அத்துடன் அவர்கள் ஒரு கூடி ஒருமித்து விளையாடுவதால், திறமையுடன், (கரடிபோன்று)பலமுடன் நன்றாக விளையாடுகிறார்கள். இதற்னால் பிரெஞ்சு ரீம் இயல்பாக எல்லோரது ஆதரவையும் இன்று வென்றிருக்கிறது.
13 comments:
அதே அதே; :(( நானும் நொந்து நூடுல்ஸாகி இருக்கிறேன். நோ ப்ரேஸில் நோ கால்பந்து..
அர்ஜண்டைனா, இங்கிலாந்து,பிரேசில் என வரிசையாக முக்கிய அணிகள் தோற்றாலும், இன்னும் பார்ப்பதற்கு சுவாரசியமான ஆட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைய பிரான்ஸ், போர்ட்சகில் ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன. பிரேசில் ஆட்டம் சொதப்பலாகவே இருந்தது
தொடர்ந்து பாருங்கள் :-)))
சரியாக சொன்னீர்கள். தென்னமெரிக்க நாடுகள் இல்லாமல் கால் பந்தா?
சோகம்...சோகம்...
ஹூம்..
நேரமில்லாமல் இன்றுவரை முழுமையாக ஒரு ஆட்டத்தை பார்க்க முடியாமற் போனது; ஃபிரான்ஸ்/ப்ரசில் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தேன். ஃபிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றியடைந்திருக்க வேண்டும்.
4 ஐரோப்பிய அணிகள் பங்கு பெறும் அரையிறுதி ஆட்டங்களை பார்க்க முயல வேண்டும். ஃபிரான்ஸ் கோப்பையை வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.
தமிழன்,
மன்னிக்கவும். உண்மையை சொல்லபோனால் இப்பொழுதுதான் எனக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
....
பிரேஸில் கொடியை காரில் கட்டிக்கொண்டு திரிந்தவனுக்கு, பிரேஸிலுக்கு அடுத்து ஆர்ஜெண்ரீனாவுக்குத்தான் ஆதரவு என்று அவர்களின் ஜேர்ஸியோடு அடிக்கடி வெளியே திரிந்தவனுக்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகள் இல்லையென்றால்.... :-(((.
.....
நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா தோற்றுப்போனாலும் அருமையான ஆட்டத்தை ஆடியிருந்தனர் (ஆட்டத்தை வைத்துப்பார்த்தால் வென்றிருக்கவேண்டியவர்களும்அவர்களேதான்). ஆனால் இன்று பிரேஸில் ஆடிய ஆட்டம் மிக மோசமானது. அதேவேளை -வயதுபோனவர்களின் அணி - என்று விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பிரான்ஸ் ஒரு ப்னீக்ஸ்யாய் எழுந்துவந்து மிக அருமையாக ஆடியிருந்தனர்.
.....
இப்போதைக்கு பிரான்ஸோ அல்லது போர்ச்சுக்கல்லோ கிண்ணத்தை வென்றால் நன்றாகவிருக்கும் போலத்தோன்றுகின்றது.
//"இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை" //
எனக்கும் தான் ஐசே.
//பிரேஸிலுக்கு அடுத்து ஆர்ஜெண்ரீனாவுக்குத்தான் ஆதரவு என்று //
அடடே, நானும் அப்பிடித்தான். சிலதரப்புக்கள், காரண காரியங்களைக் கடந்து நிரந்தரமாகப் பிடித்துப்போய் விடுகின்றன.
இவற்றைக் கடந்து ஐரோப்பிய அணிகளுக்குள் ஜேர்மன் பிடிக்கும். ஏனென்று தெரியவில்லை.
//இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை//அதே அதே! பிரேசில் இவ்வளவு மோசமாக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பிடிக்கிறதோ இல்லையோ மிச்சமுள்ளவற்றைப் பார்த்துத்தானே தீருவோம்.
//அதே அதே; :(( நானும் நொந்து நூடுல்ஸாகி இருக்கிறேன். நோ ப்ரேஸில் நோ கால்பந்து..//
எனக்கும் தான்
என்னைப்போலவே நிறைய பிரேஸில் இரசிகர்கள் இருக்கின்றார்கள் போல :-). உலகக்கிண்ணத்தை வென்றபின் ஒரு வெற்றிப்பதிவு போடவேண்டிய நாமெல்லாம் கால் இறுதியோடே அழவேண்டியதாய் போய்விட்டதே ;-(
டீசே: எஅன்க்கும் ஒருகாலத்தில் அதாவது மரடோனா காலத்து அன்ர்ஜெண்டைனா பிடிக்கும். இப்போது கூறிப்பிட்டு சொல்ல எந்த அணியும் இல்லை
பிரேசில் ஜெயித்துவிடவேண்டும் என நாம் நினைப்பது, எமது பின்புலத்தினை அடிப்படையாக கொண்டதுடன், அவர்கள் இயல்பாக கால்பந்தாட்டத்தின் நிபுணர்கள் என்பதால் அவர்களின் விளையாட்டில் தனித்துவமும், சுறுசுறுப்பும் உண்டு. இன்றும் கூட ஏனைய நாடுகளுடன் விளையாடும் போது லத்தீன் அமெரிக்கா நாடுகள் ஜெயிக்க வேண்டும் என நினைத்திருப்பேன். ஆனால், பிரான்சுடன் விளையாடும் போதுமட்டும், பிரான்ஸ் ஜெயித்துவிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அது ஒரு ஒருமித்த உலகத்தின் தன்மையை (பிரெஞ்சு ரீம்) கொண்டிருக்கிறது. பூர்வீக ஆப்பிரிக்க, அராபிய, இந்திய, ஜரோப்பிய இளைஞர்களையும் அது கொண்டிருப்பதால் அது ஒரு உலக ஒருமைப்பாட்டின் வெளிப்படையாக இருக்கிறது. இதை ஒழுங்கு படுத்தியற்காக 98 ம் ஆண்டு அதன் கோச் வலது சாரிகளால் தாக்குதலுக்கே உள்ளாக்கப்பட்டார். அவரை எல்லோருமே ஏசினார்கள், இறுதிவரை அந்த முடிவை அவர் மாற்றாததுடன், ஜெயிக்க வைத்தும் காட்டினார். இன்றும் அவரின் தேர்வு சரியானது என்பதைக்காட்டியிருக்கிறது. அத்துடன் அவர்கள் ஒரு கூடி ஒருமித்து விளையாடுவதால், திறமையுடன், (கரடிபோன்று)பலமுடன் நன்றாக விளையாடுகிறார்கள்.
இதற்னால் பிரெஞ்சு ரீம் இயல்பாக எல்லோரது ஆதரவையும் இன்று வென்றிருக்கிறது.
பத்மா, மரடோனாவையும், பேலேயையும் உலகக்கிண்ண ஆரம்பத்தில் கெளரவித்திருந்தார்கள் அல்லவா?
......
ஹரன், நீங்கள் கூறுகின்ற காரணங்கள் பல எனக்கும் உடண்பாடானவையே. அந்த வகையில்தான் 98ல் பிரேசில் பிரான்ஸிடம் இறுதியாட்டத்தில் தோற்றபோதும் ஒரளவு இலகுவாய் எடுக்கமுடிந்தது. அதேபோன்று ஜேர்மனியிடம் 2002ல் இறுதியாட்டத்தில் தோற்றிருந்தால் நிச்சயம் விசர் பிடித்திருக்கும் :-).
Post a Comment