Pop, R&B. Rap, Hip-Hip என்று ஆடல் பாடல்களுடன், பல்வேறு கலாச்சாரங்களின் பின்புலங்களுடன் பல நிகழ்வுகளைப் பார்க்க அருமையாக இருந்தது.
க்யூபாவில், மெக்சிகோவில், ஆர்ஜெண்டைனாவில், கயனாவில்,பிரேசிலில் இருந்து எல்லாம் கலைஞர்கள் வந்து தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருப்பதுதான் இன்னும் வசீகரிக்கின்றது. கனடாவில் வாழ்ந்துகொண்டிருபதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும், இவ்வாறான ஒரு பல்கலாச்சாரச் சூழலில், சகிப்புத்தன்மையுடன் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இந்தப்பனிபுலம்பெயர்நாட்டின் இருப்பு எதோ ஒருவகையில் இதத்தைத் தருகின்றது.
இன்று சனிக்கிழமை அதிகம் ஆப்ரோ பெஸ்டிவலாய் இருக்கும் என்று நேற்று அறிவித்திருந்தார்கள். இரவும் போவதாயும் உத்தேசம் இருக்கிறது.

கயானா பெண்மணியொருவர் பாடல் இசைத்தல்: பாடியது மட்டுமின்றி மிகுந்த நளினத்துடன் ஆடவும் செய்தபடி, இரசித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் தன்னோடு இணைந்து/இசைந்து பாடச்செய்து நிகழ்வை முழுக்கூட்டத்தின் கொண்டாட்டமாய் ஆக்கிக்கொண்டிருந்தார்.

பிரெஞ்சுக்காரர்கள் செய்த வித்தியாசமான நெருப்புடன் இணைந்த நடனத்தின் ஆரம்பப்பகுதி

பிரேசிலிருந்து வந்த கலைஞர்கள்.

மெக்ஸிவோவில் இருந்து வந்த (பதின்ம?) வயதுப் பெண். அப்படியே எனக்கு ஷ்கிராவை நினைவுபடுத்தியவர். மிக இனிமையான குரலுக்குரியவர். மேலும் நாளை நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்ட இறுதியாட்டத்தின் ஆரம்பத்தில் (அசல்) ஷகிரா பாடப்போகின்றாராம். தவறவிடுவேனா என்ன?

நெருப்பு நடனத்தின் நீட்சியில்.

பிரேசில் கலைஞர்களின், பாடல்களின் இலயத்துக்கேற்ப தெருவில் போட்ட ஆட்டந்தான் மிகவும் கவர்ந்தது. இந்த ஆட்டத்தின் பெயர் என்னவென்று தெரியாதபோதும், கிட்டத்தட்ட கராத்தே அசைவுகளை ஒத்திருந்தாலும், ஆனால் எவரின் உடல்மீது எவரின் உடலும் படாமல் அழகான இலயத்தில் மாறி மாறி பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்வு முடிந்தபோது.....
நிலவும், மெல்லிய வெளிச்சத்தில் சி.என் (CN) ரவரும்
4 comments:
இத்தகைய நிகழ்வுகளின் பங்குபற்றிப் பாடல்களை-நாட்டியங்களை இரசிப்பது மட்டுமல்ல தாள இலயத்துக்கேற்ப நாமும் இணைந்து ஆடுவது இருக்கே!-அதுதாம் இன்பம்.நல்லவொரு பதிவு.நான்கூட இத்தகைய நிகழ்வுகளைத் தேடிச் சென்று பாடி ஆடுவது வழமை.
I think the dance/martial art that you have pictured is Capoeira.
http://en.wikipedia.org/wiki/Capoeira
Entertainment, Food, Shopping. One can definitely enjoy it.
சிறிரங்கன், நற்கீரன் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
நற்கீரன் நீங்கள் குறிப்பிடும் Capoeira தான் அந்த ஆட்டத்தின் பெயர் என்று நினைக்கின்றேன். பயனுள்ள விக்கிபீடியா சுட்டி. நன்றி.
.......
உங்கள் சுட்டி மூலம் இன்னொரு புதிய விடயத்தையும் இன்று அறிந்துகொண்டேன். ஆபிரிக்காக் கண்டத்தைத் தாண்டி, கறுப்பு ஆபிரிக்கர்கள் அதிகம்
வசிக்கும் நாடு பிரேசில் என்பதை. Capoeira கூட அடிமையாக பிரேசிலுக்கு கொண்டுவரப்பட்ட கறுப்பு ஆபிரிக்கர்களால் ஆரம்பிக்கப்பட்டதாய் தானே சுட்டி கூறுகின்றது.
தங்கள் பதிவுகளை பார்வையுற்றேன். சிறப்பாகவுள்ளது.
என்து வலைப்பூவிற்கும் வந்து பதிலிட்டதற்கு நன்றிகள்.
Post a Comment