Friday, March 09, 2007

பெண் பார்க்கப்போன நண்பர்களின் கதை

ஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காயப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இந்த வழக்கம் இருக்கின்றதா அல்லது வழக்கொழிந்துபோய்விட்டதா என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், நமது நண்பர்கள் பெண் பார்க்கப்போனால் எப்படியிருக்கும் என்று கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை சற்று நழுவவிட்டேன்.

இனி...............

கானா பிரபா:
பி: வாவென் மலையாளச் சேச்சியே...நானுன் பட்டியாய் காலம் முழுக்க இருப்பேன். உன் கொப்பர் பிடித்திருக்கா என்று கேட்டால்... கெதியாய் சொல்லடி..ஓமென்று.
பெண்: என்ன பட்டியோ....அது யாரு? ஆடு மாடுகளை அடைக்கிற பட்டியா உது?
பி: இல்லை நாய்.
பெ: என்னை நாயெண்டால் செருப்பைக் கழட்டி அடிப்பேன்.
(பிரபா மனதிற்குள்.....) ஆ...இவாவுக்கு மலையாளந்தான் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...இப்ப பார்த்தால் தமிழும் விளங்காது போல.
பெ: சரி உம்மடைபாட்டில் முழியை உருட்டாமல் இதைச் சொல்லும்..... நான் கேள்விப்படது உண்மையோ ...
பி:: என்ன கேள்விப்பட்டனீர்...?
பெ: இல்லை நீர் முந்தி யாரையோ ஒரு பெடிச்சியை வேலிப்பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்தனீர் என்றொரு கதை உலாவுகிறதே....உண்மையோ?
பி: ஆ... ஷ்ரேயா இதை உம்மட்டையும் சொல்லிப்போட்டாவோ?
பெ: அவா ஒன்டும் சொல்லவில்லை...உங்கை வலைப்பதிவுகளில் உதுதான் பெரிய நியூசாய் எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கினம்.
பி: அதொன்டும் பெரிய கதையில்லை....நான் முந்தி ரியூசனுக்குப் போகேக்கை, ரீயுசனுக்குப் பக்கத்து வீட்டிலை இருந்த ஒரு பெட்டை வேலிப்பொட்டுக்காலை என்னைப் பார்த்து அடிக்கடி விசிலடிப்பா... அது பத்தாது என்டு ஒருநாள் 'அலைபாயுதே கண்ணா' என்டெல்லோ என்னைப் பார்த்து பாடினவா...
பெ: அவா தன்ரை பாட்டில் பாடியிருப்பா உமக்கு உம்மைப்பார்த்து பாடினதாய் ஒரு நினைப்பு.
பி: கொஞ்ச நேரம் சும்மாயிரும்......இவா இப்படிப் பாடி என்னை நக்கலடித்தால் சும்மா விடமுடியுமோ..? அடுத்த நாள் அவா வேலிப்பொட்டுக்குள்ளாலை இருந்து எனக்கு விசிலடிக்க முன்னர், அவாவுக்கு விசிலடிக்க நான் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்...
பெ: ஓகோ அப்படியா..பிறகு...?
பி: யாரோ அங்காலை சரசரவென்று நடந்துவாற சருகுச் சத்தம் கேட்டுது....நான் உடனே உய் உய் உய்ய்ங்.. என்று நல்ல சத்தத்தோடு விசிலடித்தேன்....ஆனால்....
பெ: என்னப்பா நடந்தது?
பி ஆனால் நடந்துவந்தது அவாவில்லை, அவாவின்ரை தேப்பன்...அந்தாள் வந்து வேலிப்பொட்டுக்குள்ளாலை ஒணான் எட்டிப்பார்க்கிறமாதிரி பார்த்திச்சு.
பெ: பிறகு...?
பி உமக்கு வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுகிறது கைவந்த கலை போல. பிறகென்ன...அவர் துரத்த நான் ஓட....நான் ஓட அவர் துரத்த...இணுவிலிருந்து ஆரம்பித்து கோட்டை முனியப்பர் கோயிலைக் கடக்கும்வரை என்ரை மூச்சு எனக்குச் சொந்தமாய் இருக்கவில்லை.

பிரபாவிற்கு பிடித்த படங்கள்: 'ஜெயம்' ரவி மலையாளச் சேச்சிகளுடன் நடித்த -காதல் ரேஸிங்- படங்கள்.
-----------------

பெயரிலி:
காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில் உன்னைக் கண்டபொழுது நான் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கங்கள் எல்லாம் நீட்சேயாக நீட்சியடைந்து மார்க்வெஸ் நாவலில் கடைசிப்பக்கமாய் முடிந்துகொண்டிருக்கையில் உன் விரல்களிலாத காலில் வாசனையாக அலைந்துகொண்டிருந்த காற்சங்கிலியின் கோழிக்கறி சுவையில் நான் மயங்கிய அந்தக்கணமே தண்டவாளத்தில் நசிந்துபோய்க்கிடந்த பச்சையமில்லாத காளான் முனையாய் காதல் என் நெஞ்சில் வந்து குத்தத்தொடங்குகையில்....
என்னப்பா தண்ணி வேணுமோ...முற்றுப்புள்ளியில்லாது பேசினால் இப்படித்தான் மூச்சுவாங்கும்...
உனக்கெங்கே விளங்கிப்போகின்றது எனது அவதி? எனது உயிர் கண்டி தலதா மாளிகையின் புத்தரின் தந்தப்பல்லிலும், கோணமலை இராவணன் வெட்டிலும், ஷங்காய் ஷம்பெயினிலும் தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் யுகங்களைத் தாண்டிய.....
போதும் போதும் உங்கடை அலம்பலை நிறுத்துங்கோ. நான் இப்பவே உங்களைத் திருமணஞ்செய்ய ஓமொன்று சொல்கின்றேன்..
ஆகா பெண்ணே...நான் கவித்துவமாய் உரையாடியது எல்லாம் விளங்கிவிட்டதா கண்ணே?
இல்லை...இப்படியான கொடூரத்தை இன்னொரு பெண்ணும் கேட்டு தற்கொலை செய்யக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காய் ஓமொன்று சொன்னேன்.

பெயரிலிக்கு பிடித்த படங்கள்: Bombay, கில்லி, ரன்.
-----------------------

சுகன்:
புத்தனின் தாழ் பணிந்து காதல் வந்தனம் சொல்கிறேன் கண்ணே!
என்ன புத்தரோ...அவரே மனுசி வேண்டாம் என்று வீட்டைவிட்டு ஓடிபோனவர்...எனக்கும் அந்த நிலையா எதிர்காலத்தில் வரப்போகிறது?
புத்தரை புத்தராய் பார்க்காதே; புத்தர் என்பது புத்தராயுமில்லை..புத்தராய் இருக்காதது புத்தருமில்லை..
என்னப்பா ஒரே குழப்புகிறியள்....சரி கொஞ்சகாலத்துக்கு முன் முஸ்லிமாய் மாறப்போகிறியள் என்டெல்லோ கதை வந்தது...
சா...மனுசர் நிம்மதியாய் ஒருவிசயம் செய்ய இவங்கள் விடமாட்டாங்கள்...உதை யார் உமக்குச் சொன்னது?
நீங்கள்தானே மதம் கடவுள் என்டு ஒன்டும் வேண்டாம் என்கிறனியள்...பிறகேன் மதம் மாறப்போகிறேன் ...புத்தர், அல்லா என்று ஓடித்திரிந்துகொண்டிருக்கிறியள்..?
கேட்டாயடி ஒரு கேள்வி என் செல்லக்கிளியே ..இப்ப பாரும்... மதமில்லை என்று சொல்கிறதும் ஒன்டுதான்... அல்லது எல்லா மதங்களிலையும் இருக்கிறன் என்டு சொல்கிறதும் ஒன்டுதான்.
ஆ... இவர் திருப்ப குழப்பத்தொடங்கிவிட்டார்.
இப்ப என்ன சொல்கிறீர்?
உங்களைக் கலியாண்ஞ்செய்ய எனக்கும் சம்மதம்தான்....ஆனால் முள்முருங்கையை நடுகிறதுக்கு பதிலாய் எலுமிச்சை மரம் நடச்சொல்லவேணும்
ஏன்...? எதற்கு...?
பின்ன, உங்களுக்கு அடிக்கடி பித்தம் வர அதைத் தெளிவிக்க, நான் தேசிக்காய் கடையிலை வாங்கி கட்டுபடியாகுமோ?

சுகனுக்குப் பிடித்த படங்கள்: இராம நாராயணன் இயக்கிய அம்மன் படங்கள்.
-------------------

சயந்தன்:
இதென்ன பொம்பிளை பார்க்க வந்திருக்கின்றீர்....மனுசர் ஒருத்தரையும் காணவில்லை..ஒரே நாயும் பூனையுமாய் இருக்கிறதே.
அதுவா நான், நாய் பூனை படங்கள் என்னுடைய வலைப்பதிவில் போட்டவுடன் பூனை பாட்டி, பூனை தாத்தா பூனை மாமா, பூனை அத்தை என்று கனபேர் என்னோடு உறவாகிட்டினம்.
ஓகோ அதுவா... அது சரி யார் உந்தப்பூனை? எங்களைப் பார்க்கப்பிடிக்காமல் வாசற்பக்கம் ஜயப்பனுக்கு மாலை போட்டதுமாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறது?
அது வேறு யாருமில்லை வசந்தன்தான்..அவருக்கு பொம்பிளையள் என்டாலே பிடிக்காது.
அப்படியோ?
அதைவிடும் பொம்பிளை பார்க்கிற சம்பிரதாயத்திலை பாட்டுப்பாடவேண்டும் என்டுவினம். எனக்கொரு பூனைப்பாட்டு பாடிக்காட்டும்.
பூனைப்பாட்டோ?
ஓமோம்..ஏதோ ஒரு படத்தில் நமீதா 'மியாவ் மியாவ்' என்டு செக்ஸியாய் ஒரு பாட்டுப்பாடுவாவே...அதைப்பாடும்.
(அந்தப்பெண் பார்க்கின்ற புலிப்பார்வையில், சயந்தனும் அவரது பூனைப்பட்டாளமும் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்....)

சயந்தனுக்குப் பிடித்த படங்கள்: Cat woman, 101 Dalmations
--------------------

ஷோபா சக்தி:
'ஷோபா ஷோபா'
இஞ்சை பாருங்கோ என்னுடைய பெயர் ஷோபா இல்லை.
ஷோபாவின் படங்கள் பார்த்ததிலிருந்து எனக்கு எல்லோரும் ஷோபாவாய் தெரிகின்றார்கள். நீரும் ஷோபாதான்.
இந்தாளுக்கு பித்தம் கூடிப்போய்விட்டது...உதுக்குத்தான் சொல்கிறது...அடிக்கடி சாருவோடு கதைக்கவேண்டாம் என்டு.
ஷோபா ஷோபா நீ எங்கையடி போனாய்?
இதென்ன? சோபா செட்டிலை இருந்துகொண்டு ஷோபா எங்கையடி போனாய் என்டால்?
ஷோபா ஷோபா நீயின்றி என் ஒரு அணுவும் அசையாது...
இஞ்சை பாருங்கோ...நீங்கள் இப்படி திருப்பத் திருப்ப ஷோபா ஷோபா என்டு கூப்பிட பக்கத்து வீட்டு ஷோபா நாய்க்குட்டி கூட இங்கை வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கிது.
ஷோபா ஷோபா
ஜயோ என்னால் தாங்கமுடியாதிருக்கிறது...நான் அழப்போகிறன்.
(என்று கூறிவிட்டு அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழுகின்றார்...)
ஷோபாசக்தியோ 'ஷோபா, ஷோபா' என்று -குணா படத்தில் கமல் 'அபிராமி அபிராமி' என்று பீலிங்காய் கூப்பிடுகின்ற மாதிரி- அரற்றியபடி பெண்ணின் வீட்டைவிட்டுப் புறப்படுகின்றார். 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல' என்று பாடியபடி, அடுத்து 'பெண் பார்க்கப்போன சோகக்கதை' யை எழுதத்தொடங்குகின்றார்.

ஷோபா சக்தியிற்கு பிடித்த படங்கள்: முன்பு ஷோபா நடித்த படங்கள் அனைத்தும்... இப்போது -எஸ்.ரா, 'கொரில்லா' புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்ததிலிருந்து- ரஜினியின் அனைத்துப் படங்களும்.
--------------------------

சோமிதரன்:
நீர் இப்படி சிரிக்கிறதை நான் படம்பிடித்தால் ஒரு ஈழத்து ஜஸ்வர்யா உலகிற்கு கிடைப்பா...
சும்மா லொல்லுக்கதை கதைக்கவேண்டாம்
நீர் உரையாடுகிற விதம் அப்படியே நந்திதா தாஸை நினைவுபடுத்துகிறது.
சனியன்...! இந்த சாறி என்ரை உடம்பிலை நிற்கமாட்டேன் என்கிறது
அப்ப, நான் விஜய் அசினுக்கு 'சிவகாசி'யிலை மடிசார் புடவை கட்டிவிட்டதுமாதிரி உமக்கு கட்டிவிடவோ?
எங்கடை வீட்டில வளர்க்கிற நாயிற்கு பத்து வேட்டைப்பற்கள் இருக்கிறது
நாயிற்கும் சாறிக்கும் என்ன தொடர்பு?
இல்லை நீர் சாறி கட்டிவிடப்போகின்றேன் எண்டனீர்....அதுக்கு நான் உமக்கு நன்றி செலுத்தவேண்டும்தானே...
('சோமி', 'சோமி' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது)
யாரப்பா அது?
அது டிசே, ஏதோ 'சே'யைப் பற்றி கதைக்கோணுமாம்...கெதியாய் வரட்டாம்..
சேயைப் பற்றிக் கதைக்கபோகிறியளோ..இல்லை தவறணைக்குப்போய் கள்ளுக்குடிக்கப்போகிறியளோ?
இரண்டுமே எஙகளுக்கு போதை தாற விடயந்தான்.
நாசமாய்ப் போவாங்கள்...கள்ளுக்குடிக்கின்றதென்றால் போய் கள்ளைக் குடியுங்கோவன்...ஏன் எங்கடை நேரத்தை வீணடிக்கிறியள்?

(சோமி: இந்த விசரன் டிசேயோடு இருந்தால், தனக்கு கலியாணம் வாழ்க்கையிலை நடக்காது என்டு திட்டியபடி கள்ளுக்கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்குகின்றார்)

சோமிக்குப் பிடித்த படங்கள்: அஸின், ஜஸ்வர்யா சாறி கட்டி நடித்த அனைத்துப் படங்களும்.
-----------------

வசந்தன்:
இஞ்சைப்பா, நீங்கள் புட்போல் விளையாடுகிறபோதே எனக்கு உங்களில் ஒரு கண்.
என்ன ஒரு கண்ணோ...அப்ப எங்கை உம்மடை மற்றக்கண்?
அதுவும் ஒரு நாள் நீங்கள் புருஸ்லி மாதிரி பாய்ந்து ஒரு கோல் அடித்தியளே...அண்டைக்கு மயங்கின நான் இன்னும் எழும்பவில்லை
உதென்ன விசர்க்கதை...புட்போலுக்கும் புருஸ்லிக்கும் என்ன தொடர்பு.... பேய்க்காட்ட வேண்டாம்.
இதைக்கூட மறந்திட்டீங்களா...ஒருநாள் எனக்கு கள்ளமாய் விளாங்காய் பிடுங்கிக்கொண்டு வந்து வெட்கப்பட்டுக்கொண்டு தந்ததை....
சும்மா சொறிக்கதை கதையாதையும்.
இப்ப சொல்லுங்கோ... என்னைக் கலியாணம் செய்ய விருப்பமா இல்லையா?
சாத்தான்கள் எல்லாம் பெண்கள் வடிவில் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகின்றனவே...பரலோகத்திலிருக்கும் பரமபிதாவோ என்னைக் காப்பாற்ற மாட்டீரா?
இப்ப நீர் இப்படி அழுது குழறுகிறீர்.....என்னைப் பிடிக்காவிட்டால் ஏன் இங்கை வந்தனீர்...உந்தச் சந்தியில் இருக்கின்ற சேர்ச்சிற்குப் போய் பாதராகி இருக்கலாமே?
ஒமோம்...இங்கை வரமுன்னர் அங்கை போய்விட்டுத்தான் வாறன்.
பிரமச்சாரியாக இருக்கப்போகின்றீர் என்றால் ஏன் என்னைப் பெண்ணு பார்க்க வந்தனீர்?
இல்லை சேர்ச்சில் ஒரு கன்னியாஸ்திரியும் இல்லை...உம்மை ஒரு கன்னியாஸ்திரீயாக ஆக்கவெல்லோ வந்தனான்.
அம்மா அம்மா இந்த ஆள் ஒரே கெட்டவார்தைகளால் என்னைத் திட்டுகின்றார்
(அந்தப்பெண்ணின் அழுகுரல் கேட்டு அவரின் தாயார் ஓடிவந்து, அரிசி புடைக்கிற சுளகால் வசந்தனைச் சுழற்றி சுழற்றி அடிக்கத் தொடங்குகின்றார்.)

வசந்தனுக்குப்பிடித்த படங்கள்: தேவதாஸ், சலஙகை ஒலி, லவ் ரூடே போன்ற தோல்வியில் முடியும் காதற்படங்கள்.
---------------

(ஒரளவு புரிதல்கள் உள்ள நண்பர்களையே மேலே குறிப்பிட்டிருக்கின்றேன். எனினும் எவரையேனும் தனிப்பட்டுக்காயப்படுத்தின் தெரியப்படுத்தவும். அந்தப்பகுதியை அகற்றிவிடுகின்றேன்.)

25 comments:

- உடுக்கை முனியாண்டி said...

படிச்சிட்டு உக்காந்து சிரி சிரின்னு சிரிச்சிகிட்டு இருக்கேன்.

உங்களோட பக்கம் திறக்கையில தனி விளம்பர சன்னல் ஒன்னு வருது. கொஞ்சம் கவனிங்க. அது கவுண்டரோட!!! வேலை

ilavanji said...

டி.சே,

கலக்கல்! :)

// இல்லை சேர்ச்சில் ஒரு கன்னியாஸ்திரியும் இல்லை...உம்மை ஒரு கன்னியாஸ்திரீயாக ஆக்கவெல்லோ வந்தனான் // தாங்க முடியாத சிரிப்பு! :)))

அதுசரி.. இங்கயும் வசந்தனுக்கு அல்வாதானா?! நல்ல நண்பரையா நீர்! சீக்கிரமா வசந்தன் அசினை பொண்ணு பார்க்கப் போய் செட்டாகி செட்டிலானதாக அடுத்த பகுதி எழுதுங்க. பாவம் அவரு! இளவயசு!

சயந்தன் said...

உண்மையாவே நான் பெண் பார்தத கதை ரொம்ப சுவாரசியமானது.
முதல் சந்திப்பில் அவங்க வீட்டில இருந்து நான் போரடித்துக் கொண்டிருக்க அவங்க அப்பா சொன்னார்.
போரடித்தால் இவாவோடை சைக்கிள் ஓடப் போம். வெட்கப் படாதையும். அண்டைக்குத் தொடங்கிய சைக்கிள் ஓட்டம் 3 வருசம் ஓடி.. கடைசியில இலக்கை அடைந்தது.

கானா பிரபா said...

ஆஹா, உட்கார்ந்து யோசிப்பீங்களோ ;-)

வேலிபொட்டுக்குள்ளால பார்த்ததையும் புட்டுப் புட்டு வச்சிட்டியளே?

சைக்கிள்ள போகேக்கே மதிலுக்கு மேலால எட்டிப் பார்த்த கதையையும் யாரவது சொன்னவையோ? தயவு செய்து சொல்லிப் போடாதையுங்கோ, மானம் போகுது ;-))

மலைநாடான் said...

//பெயரிலி:
காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில் உன்னைக் கண்டபொழுது நான் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கங்கள் எல்லாம் நீட்சேயாக நீட்சியடைந்து மார்க்வெஸ் நாவலில் கடைசிப்பக்கமாய் முடிந்துகொண்டிருக்கையில் உன் விரல்களிலாத காலில் வாசனையாக அலைந்துகொன்டிருந்த காற்சங்கிலியின் கோழிக்கறி சுவையில் நான் மயங்கிய அந்தக்கணமே தண்டவாளத்தில் நசிந்துபோய்க்கிடந்த பச்சையமில்லாத காளான் முனையாய் காதல் என் நெஞ்சில் வந்து குத்தத்தொடங்குகையில்....//

:))))))))

டி.சே!

கலக்கல். பின்நவீனத்துப் போட்டியோ?:)

வசந்தன்(Vasanthan) said...

உவள் என்னோட கதைச்சவள் வேற ஆரையோ மைதானத்தில பாத்திட்டு நானெண்டு கதைக்கிறாள். Goal அடிக்கிற நிலையில நான் விளையாடவேயில்லை. Goal தடுக்கிற நிலையிலதான் என்ர பாடு போனது.

சிலவேளை உண்மையிலயே புரூஸ்லி எண்டபேரில சென்.நீக்கிலசுக்கு விளையாடினவரைப் பாத்திட்டுத்தான் நான் எண்டு சொல்லிறாளோ தெரியேல.

வசந்தன்(Vasanthan) said...

இளவஞ்சி,
உங்கள் கரிசனைக்கு நன்றி.

சோமி said...

அன்புத்தலைவர் டி சேக்கு,

ஒரு முன் முடிவோடதான் இருக்கீங்க போல கிடக்கு.

கனடாவில இருக்கிற என் சித்தி மகள் அங்க எனக்கு தோதா ஒரு பிள்ளை பாக்கவோ எண்டு கேட்டாள்.மாமா சொன்னார், சும்மா உலகம் சுத்திக் கொண்டு திரியாம கனடாவில நல்ல பிள்ளையள் இருக்கு பதிவுத் திருமணம் செய்து போட்டு ஒரு வருசத்துக்குப் பிறகு இந்தியாவில களியாணம் முடிக்கலாமெண்டார்.

யாழ்ப்பாணச் சூழலில் சீதனச் சிறபில்லாதா ஊடகத் தொழிலில இருகிறவைங்க நாங்க......இதுல ஒரு பிள்ளை திரும்பிப் பாக்கிறதே பெரிய விசயம் இந்த லட்சணத்தில கள்ளுக்குடிகிற படத்தப் போட்டு ஒருத்தன் காலிபண்ணூறான்.பதிவு போட்டு இன்னொருத்தன் காலி பண்ணுறான்.............

சீ..சீ...இப்ப எனக்கு என்ன வயசாகிட்டுதெண்டு பெண்பார்க்கப் போறதப் பற்றிப் பேச வேணும்.
சயந்தன் அண்ணா,வசந்தன் அண்ணா கானா அண்ணா,ஷோபா அண்ணா சுகன் அண்ணா ரமணி அண்ணா டிசே அண்ணா இவையளெல்லாம் இருகிற இடத்தில சின்னப் பெடியன் நானும் இருகிறது சங்கடமா இருக்கு...ஹி...ஹி..

கொழுவி said...

டி சே, க.மு.ச(கலியாண முன்னேற்ற சங்கம்) என்ற ஒண்டை உமது தலைமையில் தமிழ்மணத்தில் தொடங்கலாமே.

அதன் அலோசனைக் குழுவில உமக்கு உறுதுணையாக இருந்து உம்மட சேவை சிறக்க கொழுவியின் ஒத்துழைப்பு இருக்கும்.

வி. ஜெ. சந்திரன் said...

டி ஜே உண்மையில் சிரி சிரி என்று சிரித்தேன்.

சினேகிதி said...

டிஜே சூப்பபபபபபபபபபபபபர் :-))))) அதுவும் பிரபாண்ணான்ர கதை படு சூப்பபபபபபபபபபபபபர். அந்த விசிலடிச்சவான்ர அப்பாக்கும் பிரபாண்ணாக்கு மீசை இல்லாததுக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ...........

ஒருதருக்கும் இல்லாம வசந்நதனண்ணாவை மட்டும் அடி வாங்க வச்சிட்டீர் என்ன பாவம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லாயிருக்கு டிசே.. அதென்ன வசந்தனை மட்டும் அடி வாங்க வைச்சிருக்கிறீர்? :O)

சயந்தன் - நீர் சைக்கிளோடி இலக்கை அடைஞ்ச கதைய செல்லிக்கு ஒருக்காச் சொல்லும்.. உமக்கு முற்றாக்கியாச்சோ என்டு கேட்கிறா. கொழுவியுமாச்சு என்டு சொல்லியிருக்கிறன்.

வசந்தன்(Vasanthan) said...

அம்மா சினேகிதி,
கனக்கக் கதைச்சா பெண்டுகளுக்குத் தனியாக இதே மாதிரியொரு பதிவு போட வேண்டி வருமெண்டு எச்சரிக்கிறன்.
அவை கலியாணம் கட்டியிருந்தாலும் சரி, கட்டாட்டிலும் சரி.
__________________________
சயந்தன்,
ஊரில சைக்கிளோடிப் பழகாதது உமக்கு எப்பிடி வசதியாப் போச்சுதெண்டு பாத்தீரோ?
நல்ல மாமன் வந்து வாய்ச்சார்.

அதுசரி, உவ செல்லி என்ன வேலை பாக்கிறா?
எனக்குக் கால்கட்டுப் போடவோ எண்டு கேக்கிறா, சயந்தனுக்கு முற்றாக்கியாச்சோ எண்டுறா.
இன்னும் எந்தெந்த பெடிபெட்டையள் கலியாணம் கட்டாமல் இருக்கினம் எண்டதை ஒரு பட்டியலாக்கித் தரச்சொல்லிக் கேட்டாலும் கேப்பா போல கிடக்கு.
டி.சே!
நீரும் அவவிட்ட மாட்டுப்பட்டீர்.

சோமியண்ணை,
கள்ளடிக்கிறதெல்லாம் பெட்டையளைக் கவுக்கிறதுக்கு ஒரு தகுதியா இருந்த்து. இப்ப என்ன மாதிரியோ தெரியேல.

வசந்தன்(Vasanthan) said...

//சயந்தன் - நீர் சைக்கிளோடி இலக்கை அடைஞ்ச கதைய செல்லிக்கு ஒருக்காச் சொல்லும்.. உமக்கு முற்றாக்கியாச்சோ என்டு கேட்கிறா. கொழுவியுமாச்சு என்டு சொல்லியிருக்கிறன்.
//

'மழை' ஷ்ரேயா(Shreya),

இதுக்குள்ள ஏன் கொழுவிய இழுக்கிறியள்?
நீங்களே பெரிய கொழுவியா இருப்பியள் போல கிடக்கு.

Thillakan said...

:)))
:))))))))
:)))))))))))))))

supper..!!!

வரவனையான் said...

டிசே.. கலக்கல்

அப்படியே இதன் காப்புரிமை வேண்டும் தமிழ்நாட்டு பதிவர்களை ஒரு வழியாக்க வேண்டியுள்ளது ;)

:)))))))))))))))


//ஆகா பெண்ணே...நான் கவித்துவமாய் உரையாடியது எல்லாம் விளங்கிவிட்டதா கண்ணே?

இல்லை...இப்படியான கொடூரத்தை இன்னொரு பெண்ணும் கேட்டு தற்கொலை செய்யக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காய் ஓமொன்று சொன்னேன் //

:)))))))))))))))))

// எங்கடை வீட்டில வளர்க்கிற நாயிற்கு பத்து வேட்டைப்பற்கள் இருக்கிறது //

அய்யோ பாவம் சோமிட்ட இருக்குறதே நாலு எலும்பும் கொஞ்சம் தோலும்தான்

:))))))))))))))))))))

சயந்தன் said...

Shreya
எங்கை செல்லி கேட்டிருக்கிறா முற்றாக்கியாச்சோ எண்டு.. ஒப்பேற்றிட்டம் எண்டு சொல்லவும்.

தமிழ்நதி said...
This comment has been removed by the author.
தமிழ்நதி said...

நான் முதல் ஒரு பின்னூட்டம் போட்டு அழிச்சுப் போட்டன். ஏனெண்டா ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்துபோனன்.
"காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில்..." எண்டு போட்டிருந்தியள். கடைசியா அவர் சந்தியிலை இருந்து எந்தப் பக்கமாப் போனவர் எண்டு சொல்லேல்லை. மற்றது பெயரிலிக்கு ஏன் ரன் படம் பிடிக்குமெண்டு போட்டிருந்தனீங்கள் எண்டு யோசிச்சு யோசிச்சுக் குழம்பிக்கொண்டிருந்தன்:))) பிறகு அக்கம் பக்கம் விசாரிச்சு ஒரு மாதிரிக் கண்டு பிடிச்சிட்டன்:)))))))

தமிழ்நதி said...

"அய்யோ பாவம் சோமிட்ட இருக்குறதே நாலு எலும்பும் கொஞ்சம் தோலும்தான்"

எங்கடை வீட்டையும் அப்பிடியொருத்தர் இருக்கிறார். எங்கடை அம்மா சொல்லுறவை உவனுக்குச் சரியான வினை எண்டு. சோமி! பெரியாக்கள் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.

சோமி said...

அது சரி .....பெரியவை சொன்னாச் சரிதான்.தமிழ்நதி அக்கா உங்கள்ட வீட்டை புட்டு சாப்பிட்டும் எனக்கு உடம்பு வைக்கேல்லையெண்டால் அதுக்கு வினைதான் காரணம். எதோ பெரியாக்களாய்ப் பாத்து இந்த தம்பிக்கு வினை போக்க வழி சொன்ன சரிதான்.

டிசே அண்ணை ஒரு தனிமட்ல் எனக்கு போடுங்கோவன்.
someeth13@gmail.com

பொன்ஸ்~~Poorna said...

:)))))))))))))))))))))))))))))

இராத்திரி வேளையில் உம்ம பதிவு பார்த்து சத்தமா சிரிச்சி ஒரே களேபரமா போயிடுச்சி டி.சே..

அப்படியே அசின் உங்களைப் பிள்ளைபார்க்க வந்த கதையை எழுதலாமே?

கொழுவியை எப்படி சும்மா விட்டீங்க?

கானா பிரபாவுக்குப் பிடித்த படங்களில் மீரா நடித்த படங்களை விட்டுவிட்டீர் போல..

//கனக்கக் கதைச்சா பெண்டுகளுக்குத் தனியாக இதே மாதிரியொரு பதிவு போட வேண்டி வருமெண்டு எச்சரிக்கிறன்.//
வசந்தன், எப்போ வருது? :)

இளங்கோ-டிசே said...

வருகைக்கு நன்றி நண்பர்களே.
.....
/உங்களோட பக்கம் திறக்கையில தனி விளம்பர சன்னல் ஒன்னு வருது. கொஞ்சம் கவனிங்க. அது கவுண்டரோட!!! வேலை /
முனியாண்டி, இப்ப வேறொரு கவுண்டர் இணைத்திருக்கின்றேன். இனி விளம்பரம் வராதென்று நம்புகின்றேன்.
--------
இளவஞ்சி: வசந்தனைப்பற்றி நீங்கள் விரும்புவது போல ஒருபதிவு எழுதலாந்தான். ஆனால் 'உண்மைகளை' மறைந்து ஒரு பதிவு போட எனக்கு விருப்பமில்லை :-).
........
வரவணையான்: நீங்கள் பொன்ஸை இதேபோல் தொடர்ந்து 'கலாய்ப்பீர்கள்' என்று உறுதி தந்தால், காப்புரிமை நிச்சயம் தரப்படும் :-).
.......
நதி: ஆரம்பத்தில் அங்கொடைப்பக்கந்தான் அதிக சாய்வு இருந்ததாம், பிறகு காதலர் பூங்காப் பாதை வெளிச்சமாய்த் தெரிய, பழையது மறந்துபோய்விட்டதாம் :-).

வசந்தன்(Vasanthan) said...

சோமியின்ர மின்னஞ்சல் முகவரியப் பாத்தால் ஆளுக்கு 13 வயசுதான் எண்டு தெரியுது.
உந்தச் சின்னப்பெடியனைப் போட்டு ஏனப்பா பழுதாக்கிறீர் டி.சே?
அவரை புட்டும் சீனியும் வாழைப்பழமும் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டுக் கொண்டிருக்க விட்டுவிடும்.
________________________

பொன்ஸ்,
எச்சிரிக்கை தான் விட்டிருக்கிறன்.
ஆகலும் மோசமாப் போனாத்தான் பதிவு.

த.அகிலன் said...

பதிவு போட்டு கனநாளுக்கு பிறகு பாக்க கிடைச்சாலும் ஒண்டும் சொல்லாம போக மனசில்ல டி.சேஅருமை அருமை அதிலும் சேரிமதரனைப்பற்றிய குறிப்பு அருமை.

பின்குறிப்பு:தமிழ் நதிஅக்காவீட்டை புட்டு சாப்பிட்டு உடம்பு வைத்தவர்களும் இருக்கிறார்கள்.