Sunday, May 06, 2007

நான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பும்

Spider-man-1 பார்த்த முதலாவது சந்தர்ப்பம் அழகானது (அது ஒரு கனாக்காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம்). இரண்டாவது படம் எப்படிப் பார்த்தேன் என்று நினைவினில்லை. மூன்றாவது படம் வெள்ளி மாலையில் இங்கு திரையங்குகளில் வந்திறங்கியபோது, அண்ணாவின் மகனோடும் (கீர்த்தி), நண்பனோடும் பார்ப்பது என்று முடிவுசெய்து வெளிக்கிட்டோம். ஆனால் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கு ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் எல்லாக் காட்சிகளும் நிரம்பிவிட்டிருந்தன். இணையத்தின் ஊடாக பதிவு செய்து போயிருக்கலாம் என்றாலும், குறித்த நேரத்திற்குப் போவதில் வல்லவர்கள் என்பதால், அப்படிப் பதிவு செய்து போக நான் பிரியப்படவில்லை.

என்றாலும் இன்று (வெள்ளி) ஸ்படைர் மான் பார்க்காது வீட்டிற்குத்திரும்புவது எமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்து நகரின் வெவ்வேறு திசைகளில் இருந்த மூன்று தியேட்டர்களுக்கு காரை விரட்டினோம். ஆனால் அங்கும் இருக்கைகள் நிரம்பிவிட்டிருந்தன. பின்னிரவுக் காட்சிகளுக்குப் போயிருக்கலாமென்றாலும் அண்ணாவின் மகன் நித்திரையாகிவிடுவான் என்பதால் நாளை போவோமென திரும்பி வந்திருந்தோம்.

இனியென்ன செய்வது? கீர்த்தியை வீட்டில் இறக்கிவிட்டு, இவ்வெள்ளியை எப்படிக் கழிப்பது என்று நானும் நண்பனும் நினைத்தபடி, வருடமொன்றுக்குப் பின்பாக -manualவாக- காரைக் கழுவிக்கொண்டு, வளாக நண்பர்கள் சிலரை அழைத்தோம். சரி, இன்று Toronto (Raptors) Vs New Jersey (Nets) basketball playoff game போகிறது அதையாவது பார்ப்பமென்று ஒரு loungeற்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கினோம். வழமைபோல நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோமோ அந்த அணி தோற்றுப்போகும் என்ற 'விதி'யிருப்பதால் Raptors playoff ஆட்டத்திலிருந்து (4-2) இல்லாமற்போயிருந்தார்கள். இந்தமுறையாவது சிலவருடங்களுக்கு முன்புவரை நானிருந்த/எனக்கு மிகப்படித்த நகரமாகிய ஒட்டாவாவின் ஹொக்கி அணியாவது (Ottawa Senators) stanley cup ஐ வெல்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் பாலிப்பாராக.

இவ்வாறாக, chicken wings ஐயும், french fries ஐயும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு நண்பர்கள் நாம் நனவிடை தோய்ந்துகொண்டிருந்தோம். நனவுகளை இன்னும் கொஞ்சம் அழகாக்க தண்ணியை வித்தியாசமான வர்ணங்களில் அவ்வப்போது mix பண்ணிக்கொண்டிருந்தோம். மற்றப்பக்கம் சற்று இருட்டான dance floorல் DJ spin பண்ணத்தொடங்கியிருந்தார். Ne-Yoவும், Casseyயும் கிறங்கலான குரல்களில் பாடிக்கொண்டிருக்க, 'இப்படி சின்னப்புள்ளத்தனமாய் பாடலாமா' என்று 50Centம், Jim Jones வந்து அடிக்கடி அவர்களை அதட்டிக்கொண்டிருந்தார்கள். பதின்மங்களை அப்போதுதான் தாண்டியவர்கள் என்று நினைக்கத்தக்க பெண்கள் சிறகுகளை விரித்து dance floorல் high highயாய் பறக்கத்தொடங்கியிருந்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆடமுடியவில்லையே என்று - மனசால் இப்போதும் பதின்மத்தில் இருந்தாலும் ஆண்டுகளில் அதைத்தாண்டி எங்கையோ தூக்கியெறியப்பட்ட என்னைப்போன்றவர்கள்- வயசை உயர்த்திக்கொண்டிருக்கும் கடவுளை இரண்டு நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டு, பக்கத்திலிருந்த wing machine
ல் பிட்ஸாவும், சிக்கினும் வாங்கி வயிற்றுக்குள் அமுத்தினோம்.

வானம் மற்றும் மனம் மப்பாய் இருப்பது (போல) தோன்றிய எனக்கு அடுத்த நாள் கீர்த்தியை பகற்காட்சியிற்கு கூட்டிக்கொண்டுச்செல்வதாய் கொடுத்த வாக்குறுதி மேகத்தைப் போல மிதந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் சனிக்கிழமை விடிய 12.10 p.m எழும்பியபோது (நேரத்தில் பிழையல்ல), தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மூன்றாம் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தோழரொருவர் அதிகம் கவலைபட்டுக்கொண்டிருந்தார். மனுசருக்கு ஸ்பைடர் மான் பார்க்க முடியாதிருக்கின்றதெனும் முக்கிய பிரச்சினையிருக்க, உங்களுடைய பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வழமைபோல தத்துவப் புடலங்காயை அறிவைச் சீவிக்கொடுத்தபின், கீர்த்தியையும் நண்பனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப்போனால் அங்கே ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ரிக்கெட் கிடைக்கும் என்றார்கள். இன்றைக்கு தோல்வியுடன் திரும்பிப்போவதில்லையென மதிய உணவுப் பசிக்காய் pizza-pizzaவில் ஓடர்பண்ணிவிட்டு mallற்கு போய்க்கொண்டிருந்த பெண்களை patioவிலிருந்து sight அடிக்கத்தொடங்கினேன். திரும்பவும் என் மனவிசாரம் வேதாளம் போல மேப்பிள் மரத்தில் ஏறத்தொடங்கியது; எனக்கு மட்டும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது, நான் இரசிக்கின்ற பெண்களுக்கு மட்டும் ஏன் வயசு ஏறுவதேயில்லையென்று.

குறிப்பிட்ட நேரத்தை விட, ஒன்றரை மணித்தியாலம் பிந்தி படத்தை நாங்கள் பார்க்க ஆரம்பிக்க, படத்தின் இடைநடுவில் அண்ணா தொலைபேசி அழைத்து தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னேரம் வேறொரு நிகழ்வுக்குப் போகவேண்டியிருப்பதால் கெதியாய் கீர்த்தியைக் கூட்டிக்கொண்டு வாவென்று. உள்ளே ஸ்படைர் மான் தன்ரை girl-friendஐ propose செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையில்தான் இப்படி proposal செய்யமுடியாதிருக்கிறது படத்திலாவது பார்ப்பமென்றால் அதற்குமா இப்படி குறுக்கீடுகள் வரவேண்டும்? அரங்கைவிட்டு வெளியே போய் தொலைபேசியில் கதைத்தபின் உள்ளே வந்து பார்த்தால் வேறு காட்சியிற்கு கதை நகர்ந்திருந்தது.
-------------
எங்கே ஸ்படைர் மானின் கதையென்று கேட்கின்றீர்களா? மேலே நான் எழுதியதை வாசித்தபோது எப்படி உங்களுக்கு விசர் வந்ததோ அதைவிட இரண்டு மடங்கு விசர் எனக்கு அந்தப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. ஆகவே,நான் பெற்ற இன்பத்தை நீங்களும் ......!

இப்படியாக அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து pursuit of happynessஐயும், வடிவேலின் 'நகைச்சுவை கதம்பம்' என்ற டிவிடியையும் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
-------------
....எனினும் கீர்த்தியிற்கு படம் பிடித்திருந்ததாய்ச் சொன்னான். Meet the Robinsonsஐ இன்னும் கூடவாய் இரசித்தேனென்றான். TMNT பார்க்கவேண்டுமென்றான்.

குழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது.

8 comments:

Anonymous said...

நேற்று நானும் படம் பார்க்க போனேன். சனம் முழுக்க ஸ்பைடர் மான் பாக்க போக நானும், நண்பனும் இன்னும் 10 பேரும் fructure பார்த்தோம்

சினேகிதி said...

என்ன டிஜே படம் நல்லாயிருக்குதென்டுதானே நான் கேள்விப்பட்டேன் ..இன்றுகூட ஸ்காபுறேவில் எல்லாத் தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகத்தானே இருந்தது..நாங்கள் டிஸ்ரேபியா பார்க்கப்போய் ஹொட்பஸ் பார்த்தம்:-)..அதப்பற்றியும் சொல்றதுக்கொண்டுமில்லை..R.L.Stine ன்ர ஏதொ ஒரு கதை மட்டும் ஞாபகம் வந்திச்சு படம் பார்த்து முடிய.

Ayyanar Viswanath said...

/குழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது. /
:)

தலைப்பு மட்டும் பார்த்து வியந்தேன் .. டிசே விற்கும் ஸ்பைடர் மேனா ன்னு.. இடுகை படித்தபிறகு என் உதடுகளில் தோன்றியது இதான் :)

Anonymous said...

:-((((

Anonymous said...

டிசே,

தும்புக்கட்டையும் விளக்குமாறும் நினைவிருக்குதோ..???

இளங்கோ-டிசே said...

/சனம் முழுக்க ஸ்பைடர் மான் பாக்க போக நானும், நண்பனும் இன்னும் 10 பேரும் fracture பார்த்தோம் /
நண்பர், நீங்கள் கொடுத்து வைத்தவர் :-).
...........
சினேகிதி, நீங்கள் தவறவிட்ட Distrubia படம் பார்க்க்ககூடிய படம் என்று கேள்விப்பட்டேன்;
பார்க்கவேண்டும்.

ஸ்படைர் மான் அவ்வளவு சரியில்லை என்றல்ல அர்த்தம்; இவ்வளவு நேரத்தைச் செலவழித்து பார்த்தற்கு அதில் ஒன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை என்றுதான் கூறவந்தேன். கிராபிக்ஸ் கூட அவ்வளவு பெரிதாய் இருக்காதது என்னளவில் இன்னும் ஏமாற்றமாயிருந்தது. ஏற்கனவே X-Men, Fantastic Fourன் பாதிப்பில்தான் இங்கே கிராபிக்ஸ் இருந்தன :-(((. ஆனால் சென்றவ்ருடம் பார்த்த superman -returnsஜ விட இது எவ்வளவோ பரவாயில்லை.

மற்றது சொல்ல மறந்தது... உங்களின் 'இந்தக்காதல் இருக்கே..' பதிவு இந்த நேரத்தில் சரியாய் உபயோகப்பட்டது.. வாரவிறுதியில் பத்து முறைக்கு மேலாவது நான் காதல் வயப்பட்டிருபேன் :-)
......
அய்யனார் :-).
......
/தும்புக்கட்டையும் விளக்குமாறும் நினைவிருக்குதோ..???/
எதற்கு இந்த வன்முறை, தோழரே? எதுவென்றாலும் பேசி தீர்த்துக் கொள்வோம் :-).

Anonymous said...

naasama poochu!!

ithula Spidermaan engaa?

--fd

இளங்கோ-டிசே said...

அண்ணை, மேலே இருக்கிறதுதான் ஸ்பைடர் மான் -4 கதை. விரைவில் வெள்ளித்திரையில் எதிர்பாருங்கள் :-).