Wednesday, May 16, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு?

வருகின்ற மே 31-ஜூன் 02 வரை தமிழியல் மாநாடு ரொரண்டோவில் நடைபெறவுள்ளது. சென்ற முறை கட்டணம் இல்லாது அனுமதித்தவர்கள், இம்முறை மதியவுணவு தருகின்றோம் கட்டணம் கட்டி வாருங்களென பயமுறுத்திக்கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இம்மாநாட்டில் வலைப்பதிவுகள் எழுதுபவர்களும் கலந்துகொள்ளக்கூடும் என ந்மபுகின்றேன்.

எனவே ஜூன் 02, சனிக்கிழமை அன்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாமொரு அறிமுகக் கலந்துரையாடலைச் செய்யலாம் என்று நம்புகின்றேன். வலையில் பதிபவர்கள் மட்டுமில்லாது, வலைப்பதிவுகளை வாசிப்பவர்களும் கலந்துகொண்டால் இனியதொரு பொழுதாய் அது அமையக்கூடும்.

பின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.

மின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு: dj_tamilan25@yahoo.ca

19 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சந்திப்பு நல்ல படி அமைய வாழ்த்துக்கள் . இங்க இப்பவெ புகை வர தொடங்கீட்டு :)


வற ஆக்கள் ஒருதரையும் தப்பாம படம் எடுத்து போட்டா சரி

சின்னக்குட்டி said...

வலைபதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்

சினேகிதி said...

ஏன் டிஜே 15 டொலர் தானே..ஸ்பைடர்மான் 3 எல்லாம் பே பண்ணிப் பார்க்கிறீங்கிள் தானே :-)

யார் யாரெல்லாம் வரினம் எத்தின மணிக்கு எங்க மீற் பண்ணிறீங்கிள் என்று சொல்லுங்கோ எனக்கும்.

தமிழ்பித்தன் said...

நானும் வாறன் எனக்கும் அறிவியுங்கோ
நல்ல விடயங்களைபற்றி அலசலாம் கட்டாயம் செய்வோம்
அது சரி எப்ப தமி்ழியல் மாநாடு அது பற்றிய விபரங்கள் இருந்தால் தயவு செய்து எனக்கு அறியத்தாருங்கள்
tbiththan@gmail.com

Anonymous said...

வலைப்பதிவர் சந்திப்பெல்லாம் அலுத்துப்போச்சு. ரெண்டு புளொக் வைச்சிருக்கிறவை காரிலை எதிரும் புதியுமா ரெட்லைட்ல் நிக்கேக்கை ஆளுக்காள் கையைக் காட்டினாலும், அடுத்த நாள் வலைப்பதிவர் மாநாடெண்டு போடுறியள்.

இனி பின்னூட்டி மந்தை முகாமோ மொந்தை முகாமோ போடுறியளெண்டால் சொல்லுங்கோ. நானும் வாறன். "மே" என்று மாசத்துக்குப் பொருத்தமா கருத்தும் சொல்லுவன்.

புதுமையும் முக்கியமெல்லே ராசா?

தமிழ்நதி said...

வர முடிந்தால் பழைய நண்பர்களையும் சந்திக்கலாம்... ம்.... என்ன செய்வது...? இன்னுமொரு முறை கூடும்போது பார்த்துக்கொள்ளலாம். எடுக்கும் புகைப்படங்களில் தெளிவானதை வலையேற்றுங்கள். முகங்களையாவது பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

இளங்கோ-டிசே said...

சிநேகிதி & தமிழ்ப்பித்தன்:
இது, இந்த தமிழியல் மாநாட்டின் நிமித்தம் எனக்கு உடனேவந்த யோசனை.
ஒரளவு கூட்டஞ்சேர்ந்தால் சந்திப்பை நிகழ்த்துவோம் இல்லாவிட்டால் தமிழியல் மாநாட்டை மட்டும் பார்த்துவிட்டுப் போகவேண்டியதுதான் :-).
.....
தமிழ்ப்பித்தன்: இதை ஒரு அறிமுக கலந்துரையாடலாக நிகழ்த்த மட்டுமே முடியுமென நினைக்கின்றேன். அப்படிச் சந்தித்து நமது விருப்புக்களை/சிந்தனைகளை பகிர்ந்துகொண்டால், தொடர்ந்து கோடைகாலங்களில் சில செயற்றிட்டங்களோடு வலைப்பதிவர் சந்திப்புக்களை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். ரொரண்டோவில் பூங்காக்கள் கிடைக்காமலா போய்விடும் :-)

இளங்கோ-டிசே said...

சந்திரன்,
முதலில் சந்திப்புக்கு ஆக்கள்வரோணும், பிறகுதான் படமெடுப்பதா இல்லையா என்று முடிவுசெய்யலாம் :-).
.....
சின்னக்குட்டி, சந்திப்பு நிகழ்ந்தால் உங்கள் வீடியோ பதிவில் இந்த வலைப்பதிவர் சந்திப்பைப் போடுவீர்களா :-)?
.......
சிநேகிதி, ஸ்படைர்மான் எல்லாம் சின்னப்பிள்ளையளிண்டை கதை; அதை இங்கெல்லாம் இழுக்கலாமா :-)? ஆனால் படிக்கிறவையளுக்கு $15, என்னைப்போன்ற படிக்காத காவாலிகளுக்கு $25 என்றெல்லோ நான் தமிழியல் மாநாட்டுப் பக்கமொன்றில் வாசித்திருந்தேன் :-).
........
தமிழ்ப்பித்தன்,
இந்த தளத்தில்தான் தமிழியல் மாநாடு குறித்து தகவல்களைப் பெற்றேன்.
http://www.chass.utoronto.ca/~tamils/tsc2007/main.html

அப்படி மேலதிகமாய் எதுவும் தேவையென்றால் மெயிலிடுங்கள். எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
..................
பூச்சிமருந்தும் பொலிடோலும்: என்னய்யா, இரண்டும் குடித்தால் போறவழி ஒன்றுதானே...பிறகேன் இரண்டையும் கலந்து வைச்சிருக்கிறியள்.
/ரெண்டு புளொக் வைச்சிருக்கிறவை காரிலை எதிரும் புதியுமா ரெட்லைட்ல் நிக்கேக்கை ஆளுக்காள் கையைக் காட்டினாலும், அடுத்த நாள் வலைப்பதிவர் மாநாடெண்டு போடுறியள்./
இலக்கியவாதிகள்தான் சந்தித்தால் எதிரும் புதிருமாய் முறைத்துக்கொண்டு போவார்கள். சரி வலைப்பதிவர்களாவது சிரித்துக்கதைத்துக்கொண்டு போகட்டுமே.
...........
நதி, இங்கிருந்த சில நண்பர்களும் இந்த கோடை காலத்தில் ரொரண்டோவில் நிற்பதில்லையென்றல்லவா ஓடிவிட்டார்கள் :-). நீங்கள் கனடாவிற்கு வரும்போது வலைப்பதிவர் சந்திப்பொன்றை விசேடமாய் நடத்திவிட்டால் போச்சு :-).

பொன்ஸ்~~Poorna said...

//பின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.//
டிசே, பின்னூட்டம் போடுற ஆட்களைப் பொறுத்தா? அல்லது எண்ணிக்கையைப் பொறுத்தா? ;)

Anonymous said...

/பூச்சிமருந்தும் பொலிடோலும்: என்னய்யா, இரண்டும் குடித்தால் போறவழி ஒன்றுதானே...பிறகேன் இரண்டையும் கலந்து வைச்சிருக்கிறியள்./

என்னப்பனே இப்பிடிச் சொல்லிப்போட்டீர்?
இப்ப எல்லாத்திலையும் கலப்படம் - கலர்ப்படமில்லை அசின் ஞாபகத்தில குழம்பிப்போகாதையும் - கண்டீரோ? ஒண்டை மட்டும் நம்பி வாங்கிக் குடிச்சுச் செத்துப்போகலாமெண்ட நம்பிக்கை செத்துப்போச்சுது தம்பி. அதாலதான், ஒரு கைகாவலுக்கு ரெண்டையும் கலந்து குடிச்சால், புரபபிலிட்டி கூடவெல்லே. எதையும் அறிவுபூர்வமா யோசிக்கோணும் காணும்.

வலைப்பதிவர் சந்திக்கத்தான் வேணும். ஆனால், சிக்குப்படாமல் சந்திக்கவேணும். ஆனால், பின்னூட்டிகளுக்கு உந்தச்சிக்குப்படுற பிரச்சனையில்லை. மே பி, மே நொட் பி, ஓமோம், சுப்பர், அருமை, எருமை, அற்புதம், அற்பம் உவ்வளவு வொக்காபிலரியே ஒரு ஒம்பது பின்னூட்டிக்கூட்டத்துக்குப் போதும் கண்டீரோ. சில்லெடுப்புகளில்லை.

Venkat said...

டி.சே.

ஜூன் 2, சனிக்கிழமை என் உறவினர் ஒருவர் இந்தியாவிலிருந்து வருகிறார். அவரை அழைக்க விமானநிலையம் போக வேண்டும்.

ஒரு நாள் முன்னே பின்னே தள்ளியிருந்தால் நான் வருவேன்.

இளங்கோ-டிசே said...

வெங்கட், சனியன்றுதான் மாநாடு முடிகிறது. மற்றவர்களும் சம்மதித்தால் ஞாயிறு வேறெங்காவது சந்திக்கலாம். ஆனால் ரொரண்டோ வளாகத்தில் சந்திக்கமுடியாது. ஸ்காபரோ பக்கம்தான் பார்க்கவேண்டும். வெள்ளி பலருக்கு வகுப்பு/வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.வெள்ளி சாத்தியமா தெரியவில்லை.

இப்போதைக்கு நான்கு பேர் (என்னையும் சேர்த்து) உள்ளேன் ஜயா/அம்மா சொல்லியிருக்கின்றோம். இன்னும் இரு வாரங்கள் இருக்குத்தானே. அதற்குள் ஏதாவது உடன்பாடு வருமா இல்லை ஒன்றுமே இல்லாது போகுமோ யாரறிவார் :-)?
.......
/பின்னூட்டம் போடுற ஆட்களைப் பொறுத்தா? அல்லது எண்ணிக்கையைப் பொறுத்தா? ;)/
பொன்ஸ்: இரண்டையும் சேர்த்துத்தான் :-).
.................
பூச்சிமருந்தும் பொலிடோலும்: அஸின் என்றவுடன் அப்படியே freezed ஆகிவிட்டேன். கனநாளாய் அஸின் படமொன்றையும் வெள்ளித்திரையில் காணாதது சரியான கவலையாய் இருக்கிறது:-(((.

சோமி said...

ம் ...சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

தமிழியல்...மாநாடெண்டால் இந்த மெத்தப் படித்த மற்றும் பெரிய பள்ளிக்கூடத்தில வேலை செய்யிற ஆக்கள் கூடுகிற இடாமாகத் தான் இருக்குமெண்டு நினைக்கிறன். சென்னையிலிருந்தும் சிலர் வ்ருகிறதாக கேள்வி.

ஆளாளுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பினம் டி சே க்கு பொருந்தலாம். தங்கச்சி சினெகிதி கவன்ம்.

ஜூன் 1 யாழ் நூலக எரிப்பின் 26 ம் ஆண்டு. பெரும்பாலும் இந்த திகதியள் நிறையப் பேருக்கு மறந்து போயிருக்கலாம் முடிந்தால் நினைவு படுத்துங்கள் டி.சே

Anonymous said...

நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்
பின்பு இது பற்றி கதைக்கிறேன்.

இளங்கோ-டிசே said...

update:
-சந்திப்பு நிகழ்ந்தால் ஒரளவு வரச்சாத்தியமிருக்கும் என இங்கே சொல்லியிருக்கும் நண்பர்கள் நான்குபேர்.

-சில நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்புகளில் உரையாடியபோது சனிக்கிழமை என்பதே தமது விருப்பு என்று கூறியிருக்கின்றார்கள். ஞாயிறு (June 03rd)அன்று 'இயல் விருது' தாசிசீயஸிற்கு கொடுக்கப்படுவதால் ஞாயிறு சந்திப்பது அவ்வளவு சாத்தியமில்லைப்போலத் தோன்றுகின்றது.

-ஆகவே இப்போதைக்கு சனிக்கிழமை என்றே தீர்மானிக்கலாம் போல இருக்கிறது. அடுத்த வார நடுப்பகுதியில் நேரங்குறித்து தெளிவுபடுத்துகிறேன்.

-அப்படி வலைப்பதிவு சந்திப்பு நிகழாவிட்டால் கூட, சோமி கேரளாவில் இருந்து அனுப்பும் பிட்டை (இது சாப்பிடுகின்ற சமாச்சாரம்; மற்றது அல்ல) பகிர்ந்தபடி பாவனா சேசியோடு வீடீயோ கொன்பரசில் உரையாடுவோம்.

-முக்கிய நிகழ்வாய்,சினேகிதி சில பாடல்களையும் கவிதைகளையும் பாடிக்காட்டுவார் (குழந்தைகள் மருண்டு அழக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு அனுமதியில்லை)

இளங்கோ-டிசே said...

'காலம்' சஞ்சிகையிலிருந்து வந்த மின்னஞ்சலிருந்து, தொகுத்த சில குறிப்புகள்

ஜூன் 09 அன்று சிவத்தம்பி அவர்களின் 75வது அகவையொட்டி நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. காலத்தின் சிவத்தம்பி சிறப்பிதழ் இந்நிகழ்வில் வெளியிடப்படுகிறது. வீ.அரசின் சிறப்புப் பேச்சும் , அ.மங்கையின் நெறியாள்கையில் நாடகமொன்றும் அரங்கேறவுள்ளது. அதைவிட முக்கியமாய் காலம் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது

இடம்: ஸ்காப்ரோ சிவிக் சென்ரர் (June 09, 2007)
விழா ஆரம்பிக்கும் நேரம்: பி.ப 5.30
புத்தகக் கண்காட்சி: பி.ப 3.00 தொடக்கம்
நாடகம்: பி.ப 4.00

கறுப்பி said...

வரவா விடவா?

இளங்கோ-டிசே said...

கறுப்பி, வாங்கோ வாங்கோ...

சயந்தன் said...

கறுப்பியெண்டுறது பழைய கறுப்பிதானே.. :) யக்கோ ஞாபகமிருக்கோ.. மற்றது கட்டாயம் சந்தியுங்கோ.. அது முக்கியமில்லை.. அதைப் பற்றி கலந்து கொண்ட எல்லாரும் விலாவாரியா எழுதுங்கோ.. எந்த பஸ்சில போனது எத்தனை மணிக்கு யாரோடை போனது ஆர் என்ன உடுப்பு போட்டு வந்தவை.. இது பற்றியெல்லாம் விவரமா எழுதுங்கோ.. எப்பிடியெழுதுறது என்று தெரியாட்டி அண்ணைமாரின் பதிவுகளை ஒருக்கா வாசியுங்கோ.. :))