இதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்
எதிர்வரும் ஜூன் 02 நடைபெற இருந்த வலைப்பதிவர் சந்திப்பு -தவிர்க்கக் கூடிய காரணங்களால்- இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.
மற்றும்படி -தொடர்புகொண்ட- தமிழியல் மாநாட்டுக்கு சமூகமளிக்கும் நண்பர்களைச் சந்திக்கலாம். வேறு சில வலைப்பதிவுகள் எழுதாத நண்பர்களும் வருகை தருவார்கள் என நம்புகின்றேன். வலைப்பதிவர்கள் என்ற தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே தவிர்க்கப்படுகின்றது. அவ்வளவே :-).
--------------------------------
வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன். என்கின்றபோதும் நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.
28 comments:
//வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன்//
அது சரி!
வந்துட்டம்ல!
ஆட்கள் வேணுமா?
//வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால்//
தேவையே இல்லை.. வலைபதிவர் சந்திப்பும் 'ஜூடான' தலைப்பு தான் ;)
//நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.//
துரோகி.சிவாசி படத்தை போட்டதற்காக நீர் வெட்கப்படவேண்டும்.
அண்ணா நாமம் வாழ்க
இப்படிக்கு எம்சிஆர் ரசிகன்
தீவு
அநாமதேய நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எனது split personalityயோ என எண்ணத்தோன்றுகின்றது...உள்ளதை உள்ளபடி சொன்னால் அப்படித்தானே தோன்றும் :-).
......
அப்படியெனில் இப்பதிவின் மூலம், ஒரே கல்லில் இரண்டு ஜூடான மாங்காய்களையா நான் அடித்திருக்கிறேன்?
//அநாமதேய நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எனது split personalityயோ என எண்ணத்தோன்றுகின்றது...உள்ளதை உள்ளபடி சொன்னால் அப்படித்தானே தோன்றும் :-).
......
//
:)
டி.சே.தமிழன்,
வேறு பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வந்து போட்டுவிட்டீர் என்று நினைக்கிறேன்!
:)
ஒங்க இம்சைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு....
டீசே அடிப்பன் (*_*)
தீவு, இப்படி துரோகி பட்டம் கிடைக்கும் என்றபடியால்தான், சிவாசிக்கு அருகில் தானொரு 'தேசத்துரோகி' என்று வெளிப்படையாக அறிவித்தவரை நிற்க வைத்திருக்கின்றேன்.
.....
சிபி: கடினப்பட்டு எடுத்துப்போட்ட சிவாஜி படங்கள் பற்றி ஒரு கருத்தும் கூறவில்லையே :-).
......
செல்வேந்திரன் :-).
ஆகா! ஆறுதலான பதிவு.
- சிவாஜி (நடிகர் திலகம்) ரசிகன்
கறுப்பி: நீங்களும் எம்.ஜி.ஆர் விசிறியா :-)?
அதில்லை டீசே எதுக்கு சந்திப்பு ரத்து. (*_*)
கறுப்பி, வலைப்பதிவர் சந்திப்பை ஒழுங்குசெய்ய விரும்பியதன் முக்கிய நோக்கமே புதிய வ்லைப்பதிவர்கள் எவரையேனும் சந்திக்கலாம் என்று. ஆனால் அப்படி -தமிழ்ப்பித்தன் தவிர்த்து- வேறு எவரும் வருவதாய்க் காணவில்லை. எனவே தெரிந்த முகங்கள் நாங்கள் கொஞ்சப்பேர் சந்திப்பதை வலைப்பதிவர் சந்திப்பு என்றெல்லாம் போட்டு படம் காட்ட வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். வழமைபோல தெரிந்த முகங்கள் நாங்கள் எப்படியென்றாலும் சந்திக்கத்தானே போகின்றோம் :-).
தக்கவைப்பதற்க்கான உதவிப் பின்னூட்டம்.
சனரஞ்சக நீரோட்டத்தில் எங்களோடு கலந்து விட்ட பின்னநவீனப் புயல் அண்ணன் டிசே யை வாழ்த்த வயதில்ல வணங்குகிறோம்.
அப்ப தமிழ்பித்தனை இப்ப நான் எப்பிடிச் சந்திக்கிறது? துரோகிடி டி.சே
நன்றி சோமி அண்ணை...போனபதிவில் கேட்ட கேரளாப்பிட்டு கனடாவுக்கு கப்பலில் அனுப்பிவிட்டீர்களா? அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க நமது செயற்குழு முடிவெடுத்துள்ளது. ஆதனால் விரைவில் தங்களது சித்தப்பாவிடம் கனடாவில் 'பெண்' பார்க்கும்படி சிறப்பு ஓலை அனுப்பிவைக்கப்டவுள்ளது.
....
இன்று என்னுடைய இராசியில் எந்தக்கோள் நிற்கிறது...ஒரே துரோகி, புயல் என்ற அடைமொழிகள் கத்தி வாளாய்ப் பறக்கின்றனவே. பித்தா, தமிழ்ப்பித்தா எங்கிருந்தாலும் ஓடிவந்து ஐயனைக் காப்பாற்றுக :-).
கறுப்பியெண்டுறது பழைய கறுப்பிதானே.. :) யக்கோ ஞாபகமிருக்கோ.. மற்றது கட்டாயம் சந்தியுங்கோ.. அது முக்கியமில்லை.. அதைப் பற்றி கலந்து கொண்ட எல்லாரும் விலாவாரியா எழுதுங்கோ.. எந்த பஸ்சில போனது எத்தனை மணிக்கு யாரோடை போனது ஆர் என்ன உடுப்பு போட்டு வந்தவை.. இது பற்றியெல்லாம் விவரமா எழுதுங்கோ.. எப்பிடியெழுதுறது என்று தெரியாட்டி அண்ணைமாரின் பதிவுகளை ஒருக்கா வாசியுங்கோ.. :))
/இதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்/
ம்ம்ம்...இரண்டே இரண்டு புகைப்படங்கள் மட்டும்தான... ?
எனினும் நன்றி, டிசே தமிழன்!
நல்லா தலைப்பு வைக்கிறாங்கப்பா!!!;-)
இல்லை சயந்தன் நான் பழைய கறுப்பி இல்லை.
//யக்கோ\\ what is this?
ஹாயக்கா என்பதில ஹா தவறவிடப்பட்டு விட்டது. ஆனாலும் யக்கோ என்றாக்கூட பொருள் தரும் போலத்தான் இருக்கிறது.
//சயந்தன் said...
கறுப்பியெண்டுறது பழைய கறுப்பிதானே.. //
இப்ப கொஞ்சம் வயசுபோன கறுப்பி இவ
டி.சே!
காச்சலோ..? :))
எம்.ஜி.ஆர், அசின்... :(
//விரைவில் தங்களது சித்தப்பாவிடம் கனடாவில் 'பெண்' பார்க்கும்படி சிறப்பு ஓலை அனுப்பிவைக்கப்டவுள்ளது//
தீர்மானம் செயலாக வாழ்த்துக்கள்.
ஏற்கனவே கனடால சுத்திக்கிட்டுருக்கு அந்த ஓலை பிறகேன் சோமியண்ணா இன்னொருக்கா காசு செலவழிச்சு அத திரும்ப அனுப்புவானிங்க:-)
டிசே படம் தெரியல
வருகை தந்த அனைத்து இரசிகப்பெருமக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
.....
அய்யனார், அடர்கானகப்புலிகளின் கண்களில் படங்கள் தெரியாதுதான் :-).
ஆரடா அது என்ர வயசைப்பற்றிக் கதைக்கிறது. தில் இருந்தா பெயரோட வந்து சொல்லுறது. ஒளிச்சுக் கொண்டு..
//ஆரடா அது என்ர வயசைப்பற்றிக் கதைக்கிறது. தில் இருந்தா பெயரோட வந்து சொல்லுறது. ஒளிச்சுக் கொண்டு..//
ஆ...கா ஆத்தா மலையேறிட்டா :)
Post a Comment