'கவிதை' என்று எழுதுவதைத்தான் இல்லாமற் செய்துவிட்டார்கள். இனிப் புதிதாய் எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று (அப்பதானே fieldல் நிற்கலாம். இல்லாவிட்டால் துரத்திவிடுவார்கள் அல்லவா?) யோசிக்கலாம் என்று எனது ஏழாம் அறிவைச் சுரண்டியபோது, பிறருக்கு இலவச ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். மேலும் இதற்கு சொந்தமாய் எந்த முதலீடும் இல்லாதிருப்பதால், நக்கீரர்/நாரதர் வேலை பார்க்கும் கொழுவி போன்றவர்களின் தொல்லைகளில் இருந்தும் தப்பிக்கலாம். யாராவது அடிக்க வந்தால் கூட, இது நான் எழுதியதில்லை என யாரவது unknown personஐ கைகாட்டலாம் :-).
முக்கியமாய் கீழேயுள்ள பொன்மொழிகளை ஆண்கள் வாசித்து காயத்ரி (இது நீங்கள் சைட் அடித்த/அடிக்கும் காய்த்ரி என்னும் பெண் அல்ல) மந்திரம் மாதிரி நினைவுபடுத்தி, எதிர்காலத்தில்/நிகழ்காலத்தில் உங்களுக்கு இருக்கும் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கலாம். 'எவ்வளவு நல்ல மனுசன்' என்ற பெருமைமிகுபட்டங்களை உங்கள் துணையிடம்/காதலியிடம் பெற்றுக்கொள்ளலாம். பெண்களும் அட ஆண்களும் எங்களைப் புரிந்துகொள்ளப்பார்க்கின்றார்களே என்று புன்முறுவல் பூக்கலாம். மேலும் இப்படி உங்களின் உளவியல் புரிந்தவனாய் இருக்கின்றானே என்று என்னையும் சற்றுப் பாராட்டலாம். அதிகம் பாராட்டி நிரம்பத்தும்மச்செய்து 'ஜலதோசம்' மட்டும் வரச்செய்யவேண்டாம்.
WORDS WOMEN USE
FINE
This is the word women use to end an argument when they are right and you need to shut up.
FIVE MINUTES
If she is getting dressed, this is half an hour. Five minutes is only five minutes if you have just been given 5 more minutes to watch the game before helping around the house.
NOTHING
This is the calm before the storm. This means "something," and you should be on your toes. Arguments that begin with 'Nothing' usually end in "Fine."
GO AHEAD
This is a dare, not permission. Don't do it.
LOUD SIGH
This is not actually a word, but is a non-verbal statement often misunderstood by men. A "Loud Sigh" means she thinks you are an idiot and wonders why she is wasting her time standing here and arguing with you over "Nothing"
THAT'S OKAY
This is one of the most dangerous statements that a woman can make to a man. "That's Okay" means that she wants to think long and hard before deciding how and when you will pay for your mistake.
THANKS
A woman is thanking you. Do not question it or faint. Just say you're welcome.
WHATEVER
It's a woman's way of saying *!#@ YOU!
என்ன, இதையெல்லாம் நான் தான் எழுதினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் சோகம் என்னவெனில் இது ஒரு தோழியால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. கொஞ்சம் பொறுத்திருந்தால் நான் இதையெல்லாம் எழுதியிருப்பேன் என்று ஆண்களின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காய்ச் சொல்லிவைக்கின்றேன்.
46 comments:
நூத்திப் பத்தாவது முறையாக மின்னஞ்சலிலே படித்த so-called ஜோக்கை எல்லாம், மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அமீது நெடியடித்தாலும் பரவாயில்லைன்னு கவிதை எழுதலாம்.. ரொம்ப பிரச்சனையின்னா, கனடா, பொஸ்ரன் பகுதியிலேந்து வர பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா ன்னு அறிக்கை தாக்கல் பண்ணிடுங்க..
ஹி ஹி! நாங்கள் போடுவதெல்லாம் பின்னூட்டங்கள் இல்லை; ஊட்டப்பின்கள் என்பதை இவ்விடத்திலே எங்கள் தகவலாளீக்குத் தெரிவித்துக்கொள்கிறோம் ;-)
what a pity
is someone forcing you to put this in the blog :)
மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அமீது நெடியடித்தாலும் பரவாயில்லைன்னு கவிதை எழுதலாம்..
prakash this is too much,
DJ is too original to be inspired by anyone :). Once in a while he
gets inspiration from some
member(s) of the opposite sex,
that is all :)
//நூத்திப் பத்தாவது முறையாக மின்னஞ்சலிலே படித்த so-called ஜோக்கை எல்லாம், மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக//
பிரகாஷ், அடடா இந்த வழியும் சரிவராதா :-(? சரி இனி என்ன செய்ய மாயா, சாயா (சிஷ்யைகளைத்தான் :-) )என்று காவி கட்டியபடி கொலாராடோ மலைத்தொடர்வில் ஏற வேண்டியதுதான்.
அண்ணா..
(அந்தக்காலத் தமிழ்ப்படக் கதாநாயகிகள் கதறுவாங்களே! அந்த எஃபக்டில் படியுங்க.)
நாந்தான் போன கவிதைக்கு ஒரு 'பின்'ஊட்டமும் குடுக்கேல்லையே.
இப்பிடிச் சோதிக்கலாமா?
இதுக்கு நாலைஞ்சு கவிதைய ஒரேயடியா அனுப்பிக்கூடவே ஒரு கதையும் அனுப்பிரலாமே!
-மதி
உதுக்கு நாள்பூரா படமே காட்டிரலாம்!
க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
-மதி
என் புரிதலில் , கவிதைகள் எழுதப்படுவதில்லை, பிறக்கின்றன/ஊறுகின்றன அல்லது வெடிக்கின்றன(பொஸ்ரன்).
அதை தடுப்பது கூடாது ப்ரோ. நாமார்க்கும் பீர் அல்லோம்;பின்னூட்டம் அஞ்சோம்.
/தகவலாளீக்குத்/ :-)
டி.சே இது தேவையா உமக்கு??நான் இப்படியான fwd பதிவுகள் போடலாம் ஆனால் கவிதை எழுதத் தெரிந்த உமக்கெல்லாம் ஏன் இந்த வேலை.
என் புரிதலில் , கவிதைகள் எழுதப்படுவதில்லை, பிறக்கின்றன/ஊறுகின்றன அல்லது வெடிக்கின்றன
செர்ரீமாஸுக்கு , கவிதைகள் பற்றி இன்னும் சில ன க்கள்
பிராண்டுகின்றன
குத்துகின்றன
கடிக்கின்றன
அரிக்கின்றன
சொறிகின்றன
நான் டி.ஜே யின் கவிதைகளை சொல்லவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா என்பதை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் :)
எங்கே காணமல் போய் விட்டீர்கள்?
ஆகா என்னே விளக்கம்.
/எங்கே காணமல் போய் விட்டீர்கள்?/
கொஞ்ச நாட்கள் 'நியோ'வாக மாறி சில வயர்களுக்குள் அலைந்து கொண்டிருந்தேன். இப்போதுதான் செல் போன் வழியாக வெளியே வந்தேன். நன்றி விசாரிப்புக்கு.
எங்கே ஓடித்தப்பினாலும் அடிவாங்குவதென்று என் 'விதி' போல. நல்லாய்ப் பேசிக்கொண்டிருந்த சினேகிதி கூட உனக்கு இரண்டு அடி போடாமல்லவிடமாட்டேன் என்று வீட்டுக்கதவடியில் நின்று வெருட்டுவது மாதிரி எழுதத் தொடங்கிவிட்டார். நான் 'சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கின்றேன்.
//நான் டி.ஜே யின் கவிதைகளை சொல்லவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா என்பதை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் //
'மானம்' போனதன்பின்னும், செத்தபாம்புக்கு அடிப்பது போன்று என்னை மிதிக்கும் இரவியை வன்மையாகக் கண்டிக்கின்றேன் :-).
....
//கொஞ்ச நாட்கள் 'நியோ'வாக மாறி சில வயர்களுக்குள் அலைந்து கொண்டிருந்தேன்//
Ravi, We should be careful of making fun of Karthik from now on cuz Neo's girl friend is so tough and can able to beat 10 guys at a time.
சினேகிதிக்கே கோவம் வருதுகுதெண்டா ஆச்சரியமாத்தான் இருக்கு..
டீஜே ப்ரோ, எல்லாச்சனமும் எதுக்கு இப்பிடி மினக்கெட்டு 'பின்'ஊட்டம் குடுத்துக்குதெண்டு நினைக்கிறீர்.
உம்மை மாதிரி திறமைசாலிகள் ஒழுங்கா எழுதோணும் எண்டுதான்.
உளறினாலும் சொந்தமா உளறினா பகிடியாவது செய்யலாம். இப்ப அப்படியே செய்திருக்கிறீர். களவெடுத்தண்டு வந்தெல்லோ போட்டிருக்கிறீர். சொந்தமா எழுதுமைசே.
பிராயச்சித்தமா பின்னேரத்துக்குள்ள ஒரு இடுகை போட்டிரும். தங்கத்தலைவலி சீ.. தங்கத்தலைவி அசின் பற்றியாவது எழுதலாம். புதுசா வந்த ரெண்டு ப்டமும் பாத்தாச்சா? ;)
-தங்கத்தீ. :P
\\டீஜே ப்ரோ, எல்லாச்சனமும் எதுக்கு இப்பிடி மினக்கெட்டு 'பின்'ஊட்டம் குடுத்துக்குதெண்டு நினைக்கிறீர்.
உம்மை மாதிரி திறமைசாலிகள் ஒழுங்கா எழுதோணும் எண்டுதான்\\
mathy akka neenga enna suhashini maathiri matra aakalukum serthu karuthu solringal:-)
அக்கறைக்கு நன்றி மதி. எப்ப குழப்படி செய்தாலும் குட்டி, இப்படி இந்த வழியால் ஒழுங்காய்ப்போ என்று அமைதியாக்கிறதுக்கு வீட்டில் அம்மா இருப்பதுபோல இங்கே எனக்கு ஒரு தங்கத்தீ :-)
....
எமது தங்கத்தலைவி அஸினை மஜாவிலும் சிவகாசியிலும் வீணாக்கிப் போட்டுவிட்டனர் என்று கடுப்பில் இருக்கையில் எப்படி அதைப் பற்றி எழுத முடியும்?. அதிலும் இரண்டு படத்திலும் நம்ம அஸினுக்கு இரண்டு கதாநாய்களும் அடித்ததை என்னால் பொறுக்கமுடியாது இருக்கின்றது. ம்ஜாவிலாவது அஸின் திருப்பி அடி கொடுத்ததால் விக்ரமை மன்னித்துவிடலாம். ஆனால் சிவகாசியில் விஜயை மட்டும் விடுவதில்லை என்று எரிந்துகொண்டிருக்கின்றேன். விரைவில் வெடிக்க உள்ளது (கவிதைக்கு மட்டுமல்ல அஸினுக்காகவும் பூகப்பம் வெடிக்கும்: கவனிக்க இரவி மற்றும் கார்த்திக்) அடுத்த விஜய் படம் வருவதற்குள் அவர் அஸினுக்கு அடித்தற்கு பழிவாங்குவதற்காய் தற்சமயம் ஜிம்முக்குப் போகத் தொடங்கியுள்ளேன் என்பதை அஸினின் மீதுள்ள தீவிர விசுவாசத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
....
சினேகிதி, சுகாசினியை எல்லாம் விட்டுவிடுவோமே. மதி மதியாகவே இருப்பதுதானே நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது :-).
டீசே : இப்படியாகி விட்டதே உங்கள் நிலை. பிராயசித்தமாக ஒரு நல்ல புத்தக விமரிசனம் அல்லது கவிதை ஒரு மண்டலம் எழுத வேண்டும். இல்லை என்றால் ஏழாம் இடத்தில் உள்ள சனி, குரு இரண்டும் நீச்சப்பார்வை பார்க்க நேரிடும்:)
முந்தி ரெண்டொருபேர் "கவிதை எதிர்ப்பு இயக்கமெண்டு" துவங்கினாங்கள். பிறகு அக்களின்ர சிலமனைக் காணேல. இயக்கத்தைக் கலைச்சுப்போட்டாங்களோ எண்டு நினைச்சிருந்தன். ஆனா உம்மட இந்தப் பதிவப் பாத்தப்பிறகுதான், அவங்கள் இன்னும் செயற்படுறாங்களோ எண்ட ஐயம் வந்திட்டுது. செல்லமா வெருட்டியிருப்பாங்கள் போல.
கார்த்திக்,
நீங்கள் தான் அந்த 'நியோ' வா?
\\அதிலும் இரண்டு படத்திலும் நம்ம அஸினுக்கு இரண்டு கதாநாய்களும் அடித்ததை என்னால் பொறுக்கமுடியாது இருக்கின்றது. \\
ஐயையோ டி.சே விஜயையும் விக்ரமையும் பாரத்து கதாநாய்கள் என்று சொல்லிப்போட்டீரே இனி உம்மளை யாராலும் காப்பாத்த முடியாது.ESCAPE
"கதாநாய்கள்" என்று தவறுதலாக தட்டப்படவில்லையென்றே நினைக்கிறேன். அதில் வித்தியாசமான புரிதலும் வாசிப்பும் கிடைக்கிறது.
என்ன டி.சே!
நான் சொல்வது சரிதானே?
Koluvi maybe u r right...do u have a 7th sense?:-)
//இல்லை என்றால் ஏழாம் இடத்தில் உள்ள சனி, குரு இரண்டும் நீச்சப்பார்வை பார்க்க நேரிடும்:) //
சினேகிதியையும் மதியையும் கொஞ்சம் cool-down ஆக்கியாச்சு என்று பெருமூச்சுவிட்டால் (not the LOUD SIGHT on the above post, பத்மாவும் சாபத்தோடு வந்தாச்சு :-)
//கார்த்திக்,
நீங்கள் தான் அந்த 'நியோ' வா? //
ஜ்யா, ராசா, கொழுவி! எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சும்மாவா சொன்னாங்கள் :-).
....
//ஐயையோ டி.சே விஜயையும் விக்ரமையும் பாரத்து கதாநாய்கள் என்று சொல்லிப்போட்டீரே இனி உம்மளை யாராலும் காப்பாத்த முடியாது//
சினேகிதி, அஸின் இருக்கப் பயமேன்?
......
//"கதாநாய்கள்" என்று தவறுதலாக தட்டப்படவில்லையென்றே நினைக்கிறேன். அதில் வித்தியாசமான புரிதலும் வாசிப்பும் கிடைக்கிறது.//
கொழுவி, இதிலாவது என்னோடு ஒத்துவந்தீரே. வாழ்க, வளர்க நீவீர்.
ஒரு சந்தேகம். அது கதாநாய்கள் என்பதா? சதாநாய்வள் என்பதா?
missarray mann ;-)
missarray mann, பக்கத்து பக்கத்து நகரங்களில்தானே இருக்கின்றோம், கவலைப்படாதீர்கள், ஒரு நாள் மாலைப்பொழுது கோப்பிக்கடைக்கு ஒன்றுக்குப் போய், இது குறித்து அலசி ஆராய்ந்து பிழிந்து உலர்த்துவோம் :-).
.....
சாரா, இதற்கே இப்படி உணர்ச்சிவசப்பட்டால் எப்படி? இது ஒரு துளி. இனித்தான் பெருங்கடலே பாயக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் :-).
...
இந்தமாதிரி 'அருமையான' பதிவு போட்டு அடிவாங்கினாலும் சின்னதாய் ஒரு சந்தோசம் உள்ளது; hibernate செய்த உங்களைப்போன்றவர்களை வலைப்பக்கங்களில் மீண்டும் காண்பது :-).
//நீங்கள் தான் அந்த 'நியோ' வா?//
இல்லை;நான் ஐயோ :-(
//கோப்பிக்கடைக்கு ஒன்றுக்குப் போய், //
ஹிஹி, காப்பிக்கடைக்கு காப்பி குடிக்கத்தானே போவார்கள்? ;-)
அய்யோ தம்பி, பகிடிக்கு missarray mann எண்டு போட்டால், ஆள் மாறிப் போய் ஆரையும் கேட்டு ஒண்டுக்குப் போற இடத்திலை அடியை வாங்கியிடாதைப்பா. நியோவே நீயோவெண்டு குழம்பிப்போயிருந்திருப்பினம் கனபேர். ;-)
அடி வாங்கினால், பிறகு மெய்யாகவே cry baby dj எண்டெல்லோ நான் பின்னூட்டவேணும்.
நீதி: (*_*) இனைக் கண்டு ஏமாறாதீர்கள் ;-)
ஆனாலும் (*_*) எண்டதுக்கு என்னதான் அர்த்தம்?????? :-(
/ஹிஹி, காப்பிக்கடைக்கு காப்பி குடிக்கத்தானே போவார்கள்? ;-)/
சன்னாசி, சில கடையளிலை போறது குடிக்கத்தாற கோப்பிலியும் பெற்றர் எண்டு டிசே தம்பி சொல்லவாராறெண்டு நினைக்கிறன் ;-)
பெயரிலி,
நான் modern பொஸ்ரன் ரீப் பார்ட்டியை நினைத்து அல்லவா உங்களை அழைத்தேன் :-)? விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை மாதிரியான பீலிங்கில் இதை வாசித்துப்பார்க்கவும்). நானும் கார்த்திக்கும் பொஸ்ரன் வந்தபோது, நீங்கள் போட்டுத்தந்த ரீயின் உருசியைக் கண்டுதானே, எங்கடைபாட்டில் சுடுதண்ணீர் வைத்துக்குடித்தாலே எவ்வளவு இன்பமாய் இருக்கும் என்று சுடுதண்ணீர் வைக்கப்பழகிக்கொண்டிருக்கின்றோம் என்பது தாங்கள் அறியாததா என்ன :-)?
//சில கடையளிலை போறது குடிக்கத்தாற கோப்பிலியும் பெற்றர் எண்டு //
சன்னாசி, நமது முன்னோடிகள் அதை அனுபவித்து, எங்களுக்கும் வழிகாட்டும்போது ஏற்றுக்கொள்வதுதானே மரியாதை :-).
//ஆனாலும் (*_*) எண்டதுக்கு என்னதான் அர்த்தம்?????? //
இதற்கு, Canadians are so generous and smart என்றுதான் அர்த்தம் என எங்கள் நாட்டு அகராதி கூறுகின்றது.
அட அப்பிடியோ... அடிடா சக்கையெண்டானாம்.
அடிடா பீகோ டீ சக்கையென்டானாம்?
டிஜே, வாரத் தொடக்கத்தில் யார் முகத்தில் விழித்தீர்கள்? சகட்டு மேனிக்கு ஜனங்கள் போட்டுத் தாக்குவதைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. சோம்பலாயிருக்கும் தருணத்தில் ஒருவேளை Crappucino குடிக்கும் உத்தேசமிருந்தால் இது உதவுமா பாருங்கள் ;-)
ம்...ம்.. நமக்குத்தன் கவிதையப் பத்தி ஒன்றும் (ஒண்ணு ? ஒன்னு ???) தெரியாது சரி..இப்ப எதோ புரியுறமாதிரி போட்டுருக்கார் டி.சே என்று வந்தால்.. அரதப் பழசான அறிவுரையை (அறிவுரைதான் பழசு ஆனால் காலத்துக்கும் அது உண்மை) போட்டு வெறுப்பு ஏத்துறீங்களே
/சன்னாசி, நமது முன்னோடிகள் அதை அனுபவித்து, எங்களுக்கும் வழிகாட்டும்போது ஏற்றுக்கொள்வதுதானே மரியாதை :-)/
மொராஜி தேசாய் சார்பாக அவர் வந்து மரியாதையை ஏற்றுக்கொள்ளமுடியாதலால், ஏற்றுக்கொள்கிறேன்.
சுடுதண்ணிக்கு சாயங்காட்டினால், ரீ
இப்படி மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்ததெல்லாத்தையும் இங்க போடக்கூடாது. ஆமா!
:)
பாவியளா உங்கடை தொல்லை தாங்க முடியாமற் தானே அண்ணை கவிதை வேண்டாம் பகிடியே போதுமெண்டு முடிவெடுத்தவர்.இப்ப ஆளை கடுகு மிளகு வெங்காயமெல்லாம் போட்டுத்தாளிச்சா அந்தாள் கவிதை எழுதப்போகுது.நானும் கன நாளா அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்க்கிறன் விட மாட்டியளே
சாயத்துக்குச் சூடு காட்டினாலும் ரீ தான்.
ஆனா கோப்பிக்கு சூடும் காட்டலாம் குளிரும் காட்டலாம்.
DJ i understand your problem,
i offer a simple solution-
disable comments :)
சன்னாசி, உங்களைப் போல எனக்காய் பரிதாபப்பட சில ஆன்மாக்கள் இருக்கிறது என்பதை அறிகின்றபோது ஆசுவாசமாய் இருக்க்கிறது. நீங்கள் குறிப்பிட்ட இணைப்புக்கு நன்றி. எதற்காய் இந்த இணைப்பை நீங்கள் தந்தீர்கள் (:-) ) என்பது தெளிவாகப்புரியாவிட்டாலும், candians are so generous and smart என்பதை அந்தக்கட்டுரை நிரூபிக்கின்றது என்பதற்காய் அதற்கு நன்றி. University of Guleph என்ற கனேடீய வளாகம் ஆய்வைச் செய்ததால் Canadians are smart என்ற எனது கூற்றையும் அந்த ஆராய்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டதால் generous people என்பதுவும் நீருபிக்கப்பட்டுள்ளது. மேலும் cherry என்று கார்த்திக் பற்றியும் குறிபிட்டிருப்பதையும் அறிந்துகொண்டேன். அடிக்கடி Niagara falls borderற்கு கார்த்திக் வந்து கனடாக் காற்றைச் சுவாசித்து அறிவுக்கொழுந்தாய் மாறிவிட்டார் என்று நினைக்கின்றேன். எனவே ஒரு கனடாவின் மூத்த'குடி'யாய் இருந்து இந்த இளைய'குடி'யை வருக வருகவென வரவேற்கின்றேன். பொஸ்ரன் பக்கம் கன்டாக் காற்று வீசுவதை வலுக்கட்டாயமாய் நிறுத்தி வைத்திருப்பதால், அந்தப் பக்கம் உள்ளவருக்கு இந்தப் பெரும பாக்கியம் கிடைக்கப்போவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் :-).
//சுடுதண்ணிக்கு சாயங்காட்டினால், ரீ//
//ஆனா கோப்பிக்கு சூடும் காட்டலாம் குளிரும் காட்டலாம்//
கொழுவி, ப்ரோ எனக்கு 'கவிதையை' இன்னொருவரின் சாயலில் எழுதியமாதிரி, சுடுதண்ணீர் வைத்தால் ரீ ஊற்றுவது பெரிய பிரச்சினை இல்லையென்று இதற்கும் சாயம்/சாயல் காட்டும் என்று எனக்கு குட்டு வைக்கின்றார். அது புரியாமல் நீர் கப்பச்சினோ hotவா அல்லது coolவா போடுவது என்று விவாதித்துகொண்டு நிற்கின்றீர் :-).
//அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்க்கிறன் விட மாட்டியளே //
தம்பி ஈழநாதன், 'அண்ணன் என்னடா தம்பி என்னடா' என்று தத்துவப்பாட்டு பாடிக்கொண்டு போவேன் என்றா நினைத்தீர். அது ஒருக்காலும் நடக்காது ராசா. நான் ஓய்வெடுக்கும்போறன் என்று எழுதியபோதே நீர் இட்ட பின்னூட்டதைப் பார்த்துத்தானே மாதம் ஒன்றுக்குப் பிறகு வரலாம் என்றிருந்த நான், இரண்டு வாரத்துக்குள்ளேயே ஓடி வந்தனான் :-).
...
//i offer a simple solution-
disable comments :)//
இரவி, இப்பவாவது பரவாயில்லை பின்னூட்டதில் வந்துதான் அடிக்கின்றார்கள். பின்னூட்டப் பக்கத்தை இல்லாமற்செய்திவிட்டால் தனித் தனிப் பதிவுகள போட்டே
வறுத்தெடுத்துவிடுவார்கள் :-).
டிசே பதிவு பகிடியாக இருந்தது. ரொம்ப நன்னி.
அந்த அல்வாஜட்டி விஜய் உங்களுடன் பேசுவதாக நினைத்து உங்களுக்கு அனுப்புவதாக நினைத்து எனக்கு அனுப்பிவிட்டான் ஒரு மெஜேஸை. அன்றுதான் கண்டு பிடித்தேன் நீங்கள் அவனுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் எண்டு.
Post a Comment