Tuesday, November 29, 2005

(அண்மையில்) படித்ததில் பிடித்தவை

ஆரம்பம் இங்கே

நிவேதா கொழும்பிலிருந்து அண்மையில் வலைப்பதிக்க ஆரம்பித்திருக்கின்றார். இறுதியாக எழுதிய கனத்துப்போன நினைவுகள் மிக அருமையாக இருக்கிறது. நேர்மையாகக் கருத்துக்களை வைக்கும்போது எந்தப்பயமோ, தயக்கமோ வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவு நல்லதொரு உதாரணம். கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், அவரது மொழி ஆளுமை. ஒரு விடயத்தை எழுதுவது என்பது பெரிய விடயமல்ல, அதை எப்படி வாசிப்பவருக்கு present செய்கின்றோம் என்பதில்தான் உண்மையான எழுத்தின் பலம் இருக்கிறது. மிக இயல்பான எழுத்து நடை நிவேதிதாவுக்கு வந்திருக்கிறது. தனது பரீட்சைகளின்பின் இன்னும் நிறைய எழுதுவார் என்று எதிர்ப்பாக்கின்றேன்.

சன்னாசி, நகுலனின் புனைவுகள், பற்றியும், சல்மான் ருஷ்டியின் நாவல் பற்றியும் எழுதிய பதிவுகள் மிக அருமையானவை. சிலருடைய வாசிப்பையும், எழுத்தையும் வாயூற வாயூறப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதில் சன்னாசியும் ஒருவர். இந்த ஆசாமிக்கு தெரியாத விடயம் ஏதாவது இருக்கிறதா என்று பலமுறை யோசிப்பதுண்டு (அப்படி நான் நினைக்கும் இன்னொருவர் பெயரிலி). சன்னாசியுடன் என்றாவது ஒருபொழுது நேர்காணல் கண்டு எப்படியெல்லாம் எழுத, வாசிக்க ஆர்வம் வந்தது என்பது பற்றியும், எப்படி இவ்வாறான் விரிவான தளத்துக்கு வாசிப்பை விசாலிக்கச்செய்தார் என்பதையும் அறிய ஆவல். மேலும் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருபவன் என்பதால் எனது ஆதங்கம் ஒன்றையும் (விமர்சனம் செய்யாமல் எப்படி ஒரு பதிவு எழுதுவது :-)) கூறவேண்டும். நேரங்கிடைத்து, சந்தர்ப்பம் வாய்த்தால், புலம்பெயர், ஈழப்படைப்புக்களை வாசித்து தனது எண்ணங்களை சன்னாசி பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பு. இப்படி பரந்த வாசிப்புடைய சன்னாசி போன்றவர்களின் விமர்சனங்கள் ஈழ/புலம்பெயர் படைப்புக்களுக்கு இன்னும் வளம் சேர்க்கும் என்பது எனது தாழ்மையான் எண்ணம்.

மரம், கடைசியாய் எழுதிய பதிவு வித்தியாசமான கோணத்தில் அண்மைக்காலப்பிரச்சினைகளை யோசிக்கவைக்கிறது. குஷ்பு விவகாரம் குறித்து தெளிவாய் எனது கருத்துக்களை வைத்ததால் அவற்றைப்பற்றி இன்னொருமுறை பேசவேண்டிய அவசியமில்லை. குஷ்பு விவகாரத்தைச் சாட்டி, ஒரே நாளில் லிபரல்களாயும், பெரியாயவாதிகளாகவும் ஆன பலபேரை நினைக்கத்தான் பயமாயிருக்கிறது. திருமாவளவனும், இராமதாசும் குஷ்பு விவகாரத்தில் அபத்தமாய் கூறியதைச் சாட்டாக வைத்து அவர்கள் இதுவரை பேசிய அனைத்துவிடயங்களையும் மட்டந்தட்டிவிட்டுப் போகின்றவர்களைப் பார்க்கும்போதுதான், மரத்தினுடைய இந்தப்பதிவு எனக்கு முக்கியமாய்ப்பட்டது.

தமிழ்க் கலாச்சாரம், குஷ்பு விவகாரம், கற்பு குறித்து அருள்செல்வனும்
மூன்று கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். நான் யோசித்துப்பார்க்காத கோணங்களை, இன்னொரு விவாதத்திற்கான சில முக்கிய புள்ளிகளை விட்டுச்செல்வதால் அவையும் முக்கியமான கட்டுரைகளாக எனக்குத் தெரிகின்றன.

(1) மரம்
(2) ஜகாரஸ் ப்ரகாஷ்
(3) கண்ணன் (பெங்களூர்)

பி.கு: மதி, நீங்கள் கூறிய கட்டுப்பாடுகளுக்கேற்ப நான் விளங்கி எழுதினேனா தெரியவில்லை. திருத்த வேண்டியிருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி.

20 comments:

ROSAVASANTH said...

டீசே, குஷ்பு விவகாரம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்கே எழுதியிருக்கிறீர்கள். அதை பார்த்ததாய் ஞாபகம், படிக்க விட்டுவிட்டது. சுட்டி தர முடியுமா?

Thangamani said...

நன்றி டிசே. நல்ல பதிவு.

இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
இங்கே சுட்டலாம் (பின்னூட்டப்பகுதியில்) நன்றி.

இளங்கோ-டிசே said...

RosaVasanth,
I'm not sure why the above link is not working properly.

http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112775437846371933.html

Can you do cut and paste the above link? Thank you.

Chandravathanaa said...

சுட்டிகளுக்கு நன்றி டி.சே

ROSAVASANTH said...

சரி, கவிதையாய் இல்லாமல் உரைநடையில் நீங்கள் எழுதியதை பார்த்ததாய் ஞாபகம். தவறாகவும் இருக்கலாம். நன்றி.

கொழுவி said...

//சரி, கவிதையாய் இல்லாமல் உரைநடையில் நீங்கள் எழுதியதை பார்த்ததாய் ஞாபகம். தவறாகவும் இருக்கலாம். நன்றி.//

டி.சே. உரைநடையில எழுதிறதே பெரிய விசயமாப் போச்சு.
;-)))

இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
கவிதையைக் குறிப்பிடவில்லை. அதன் பின்னூட்டப்பகுதியில் எழுதியதைத்தான் குறிப்பிட விளைந்தேன். சிலரது பதிவுகளுக்கு பின்னூட்டமாய் சிலவற்றை எழுதியதாய் நினைவு மற்றும்படி தனிப்பதிவாய் கட்டுரையாய் எனது பதிவில் எழுதவில்லை.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றி டீஜே! நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

இப்படியெல்லாம் உங்கள மாதிரி ஆசாமிகள் இருப்பதால்தான் என்னைமாதிரி தொந்தரவு செய்யும் ஆட்கள் கூடுகிறார்கள். ;)

அண்மையில்தான் நிவேதாவின் பதிவுகளை எட்டிப்பார்த்தேன். அதுவும் அவருடைய பெயரின் காரணமாகத்தான். :( இப்போதோ, அடுத்த பதிவு எப்ப எழுதுவார் என்று காத்திருக்கிறேன். உங்களுடைய பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி டீஜே. நிவேதாவின் பதிவை இப்போது எட்டிப்பார்த்தேன். பலர் இங்கிருந்து சென்றதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நல்ல ஆளை அடுத்துத் தேர்ந்திருக்கிறீர்கள். 'யளனகபக' கண்ணனை முதற்சுற்றிலேயே தொந்தரவு செய்ய நினைச்சு பாவம்னு விட்டேன். இப்போ ஐயா மாட்டிக்கிட்டார்..

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆமாப்பா! யாராவது சன்னாசியை உடும்புப்பிடி பிடித்து பேட்டி காணுங்கள். உங்களைப்போலவே மேற்சொன்ன இருவரையும் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்.

ஒரு நாளில்ல ஒரு நாள் நேர்ல போய் பிடிக்க முயற்சிப்போம். சரியா ப்ரோ? ;)

சன்னாசி: உஷார்! ;)

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

DJ,

could you pls enable 'backlinks' in your blog. you can find that in the comment section of your dashboard.

Thanks DJ.

-Mathy

இளங்கோ-டிசே said...

//could you pls enable 'backlinks' in your blog. you can find that in the comment section of your dashboard.//
Done :-).

இளங்கோ-டிசே said...

இந்தப் பதிவின் அடியில் ஒரு இணைப்பு வர (மதியின் உபயம் என்று நினைக்கின்றேன்) என்னதான் அது என்று அழுத்திப்பார்ப்போம் என்ற அவதியில் அழுத்திவிட மீண்டுமொருமுறை தமிழ்மணத்தில் புதிய பதிவுபோலக் காட்டுகின்றது. மன்னிக்கவும் :-(.

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்கள் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பத்மா அர்விந்த் said...

சன்னாசியை பற்றிய வியப்பு உங்களுக்கும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்களும் நிறைய படிப்பனுபவம் கொண்டவர் என்பதால்.நிவேதாவின் பதிவுக்கான அறிமுகத்திற்கு நன்றி.

சினேகிதி said...

tx for introducing Nivetha's blog DJ.do u knw tat someone else has ur nick name?

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி பத்மா மற்றும் சினேகிதி.
....
//DJ.do u knw tat someone else has ur nick name?//
யார் அந்த என்னுடைய இன்னொரு twin :-)?

Kannan said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

டிசே,

தெரியாதா? இங்கே இருக்கிறார். கவிதையெல்லாம் நன்றாக எழுதுவார். நீங்கள் பார்த்ததில்லையோ?

:-)

சினேகிதி said...

oh this is ur twin's link :-)
http://mindcrushes.blogspot.com/