Wednesday, November 02, 2005

கட்டாய விருப்ப ஓய்வு குறித்து ஒரு சத்தியக் (ம் அல்லாத) கடதாசி

சில வாரங்கள் (அல்லது சில மாதங்கள்) வலையில் எழுதுவதை நிறுத்தி நண்பர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற வருடம் கார்த்திகை மாதத்தில் ஏதோ ஒருநாளில்தான் வ்லைப்பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தேன். இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு பதிவுகள் எழுதியிருப்பேன் போலக்கிடக்கிறது (ஆகக்குறைந்தது பத்துப் பதிவுகளாவது உருப்படியானதா என்பது வேறு விடயம் :-) ).

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், புரட்டாதி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன். அன்றைய நாளில் பிரியமான இரண்டு தோழியரின் பிறந்த நாளும் வந்தததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வலைப்பதியவும் செய்யும் அந்த இரு தோழியருக்கும் வாழ்த்து! அத்தோடு இந்த கார்த்திகை மாதத்தில், திருமணப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் அருமைத் தோழர் ஒருவருக்கும் திருமணநாள் வாழ்த்து உரித்தாகட்டும் (I am missing the opportunity to see your wedding ceremony buddy).

இறுதியாய், கனடாவில் இயல் விருது என்று ஒரு விருது படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்பட்டபின் இவரை விட அவருக்கு வழங்கியிருக்கலாம் என்று முணுமுணுப்பதைவிட, இந்த முறை என் சிற்றறிவுகுட்பட்டவகையில் இந்த விருதுக்காய் சிலரைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கார்த்திகேசு சிவத்தம்பி
கி.ராஜநாராயணன்
அம்பை
சோ.தர்மன்
எம்.ஏ. நுஃமான்
ராஜம் கிருஷ்ணன்
வண்ணநிலவன்

நன்றி.

13 comments:

Thangamani said...

ம்ம், சரி. போய்ட்டு வாங்க.

இளங்கோ-டிசே said...

இப்போதுதான் பின்னூட்டப் பெட்டியைத் தட்டிப் பார்த்தேன். அது error என்று hrrrrrr யாய் பல்லிளித்துக்கொண்டிருந்தது. சரி, பெரிய தலையங்கத்தால்தான் இது நடந்திருக்கும் மாற்றுவோம் என்று எனது வலைப்பதிவுக்குள் சென்று பார்த்தால், எழுதிய பதிவின் சுவடைக்காணவில்லை. நல்லவேளையாக தமிழ்மணத்தில் பதிவு தொங்கிக்கொண்டிருந்ததை கொக்கிச்சத்ததால் இழுத்துப் பிடித்து இன்னொரு முறை பதிவில் இட்டுவிட்டேன். Horray :-)

இளங்கோ-டிசே said...

Oops, Thangamani, you're so quick :-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், ஐப்பசி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன்

folks, read between the lines.
Let us wish DJ a good break and
a breakthrough in .... you all
know what :)

ஜென்ராம் said...

கட்டாய விருப்ப ஓய்வு என்று தலைப்பைப் பார்த்து வந்தேன். 'வேறு'
கட்டாயத்தால் நீங்களே விருப்பத்துடன் விடுப்பில் போகிறீர்கள் என்று புரிகிறேன். ரவி வேறு விளக்கம் தருகிறார். வாழ்த்துக்கள்.ம்ம், சரி. போய்ட்டு வாங்க.

பத்மா அர்விந்த் said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள் எல்லாவற்றிற்கும் , புதிய இடம், புதிய adventure. மேலும் பல புதிய கவிதைகளை திரும்ப வந்தவுடன் எதிர்ப்பர்க்கிறேன்.

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கும், வரிகளுக்கிடையில் அர்த்தம் கண்டுபிடித்தமைக்கும் நன்றி.
....
சேகுவராவின் சொத்துரிமைப் பிரச்சினையால் வந்த வினையால்தான் இரவி என்னுடைய ஒவ்வொரு பதிவையும் நுணுக்கி நுணுக்கி ஆராந்து புதுவித அர்த்தங்களை அடையாளங் காண்கின்றார் என்று நம்புகின்றேன்.
இரவி, வேண்டுமென்றால், போட்டுத் திரிகின்ற சேகுவரா ரீ- சேர்ட்டையும், பொப் மார்லி செயினையும் கழட்டித் தருகின்றேன், இப்படி என்னை வம்பில் மாட்டாது விட்டால் மட்டும் போதும் :-).
....
சரி, உண்மையான் காரணத்தைக் கூறிவிடுகின்றேன். புது இடத்துக்குப் போனதால், இணைய, ரீவி, தொலைபேசி இணைப்புக்கள் இன்னும் வந்து சேரவில்லை. நேற்று இருந்த appointmentம் தவறவிடப்பட்டதால், இன்னும் இரண்டு வாரம் இணைப்புக்களுக்காய் காத்திருக்கவேண்டி வரப்போகிறது. (நேற்று, இணைப்புத் தருபவர்களுடன், மூன்று வாரங்களுக்கு மேல் நான் காட்டிலா வாழ வேண்டும் என்று ஒப்பாரி வைத்தது தனிக்கதை. உலகமயமாதல், பெரும் நிறுவனங்கள், சிறு நிறுவனஙகளை விழுங்குவதால் ஏற்படும் 'நன்மைகளை' நேற்று நேரடியாக அனுபவித்தேன் :-(( ). வலைப்பதிவுகள் எழுதுவதை நிறுத்துவதற்கான இன்னொரு காரணம், மறைக்காமற் சொல்வ்து என்றால், எழுதுவதற்கான சரக்கு தீர்ந்துர்ந்துபோனதும் கூடத்தான். புது புதுப் புத்தங்களைப் பார்க்கும்போது, வாசிக்க நிறைய நேரம் ஒதுக்க வேண்டும் போல ஆசை பெருகுகிறது. இந்த எளிய காரணங்களே மேற்படி பதிவுக்கான காரணம், காரணம் மற்றும் காரணம் ஆகும்.
....
மற்றும்படி தொலைவில் எங்கும் செல்லவில்லை, நீங்கள் ஒரு சொல் கூப்பிட்டால் ஒடிவராமலா போய்விடப்போகின்றேன் :-).

-/பெயரிலி. said...

ப்ரோ, ஏற்கனவே வம்பைப் பதிவுகள் செய்திருப்பதாகத் தெரிகிறதே. ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சீக்கிரம் திரும்பி வாரும் ப்ரோ. நீர் வரும்வரை யாரைப் பகிடி பண்ணுறதெண்டு தெரியேல்ல.

ஆனாலும் ரவி மாதிரி பகிடி செய்யமாட்டன் எண்டு வாக்குக் கொடுக்கிறன்.

-மதி

Sri Rangan said...

சென்று மீள்க,நலமுடன்!

ஈழநாதன்(Eelanathan) said...

அப்பாடா ஒரு தொல்லை விட்டுது.இனி நான் கவிதை எழுதலாம்.

போய் வருக நலமுடன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

டிசே, இதுக்காகவாவது நீர் கெதியா வரோணும். சொல்லிட்டன். உந்தச் சிங்கப்பூர் சனங்கள் கவிதை கிறுக்கத் தொடங்கினா என்னாகிறது?

-பாய் விறாண்டுற மாதிரி வந்திருமோ எண்ட கவலையோடு
மதி

Kannan said...

விரைவில் திரும்பி வாருங்கள், நிறையச் சரக்குடன்...