நினைத்ததுமாதிரி, கருத்துக்கணிப்புக்களை புரட்டிப்போடாது, கொன்சர்வேடியினர் வென்றிருக்கின்றனர். எனினும், பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாது, சிறுபான்மை அரசாக கொன்சர்வேடியினர் ஆட்சியமைப்பது ஆறுதலாக இருக்கிறது. இல்லாவிட்டால் தாங்கள் நினைத்ததுமாதிரி, எல்லா வலதுசாரி கொள்கைகளை அனைவருக்குள்ளும் திணித்திருப்பார்கள் (samesex marriage, abortion போன்றவற்றிற்கு எப்படியெனினும் பாராளுமன்றத்துக்கு billsகொண்டுவரத்தான் முயல்வார்கள்)
கொன்சர்வேர்டி - 124
லிபரல் - 104
ப்ளாக் க்யூபெக்- 50
என்.டி.பி- 29
சுயேட்சை- 01
(ஒரு தொகுதி முடிவு, சில தொழில்நுட்பக் காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை)
நான் இருக்கும் தொகுதியில் லிபரல் கட்சியில் போட்டியிட்டவர் வென்றுள்ளார். கொன்சர்வேட்டிக்கட்சியில் தேர்தல் கேட்ட, தமிழர் இரண்டாவதாய் வந்துள்ளார்.
3 comments:
தமிழர் ஒருவர் தானே வேட்பாளராய்ப் போட்டியிட்டார்?
தமிழர் ஒருவர் தானே வேட்பாளராய்ப் போட்டியிட்டார்?
வசந்தன், மூன்றுபேர்கள் என்று நினைக்கின்றேன். Green Party சார்பில் வளாகத்தில் படிக்கும் ஒரு தமிழ்ப்பெண் (Grace) போட்டியிட்டவர். மற்றவர் பற்றிய விபரம் சரியாகத் தெரியவில்லை.
Post a Comment