< சிரிப்பு வருகிது சிரிப்பு வருகிது நினைக்க நினைக்க சிரிப்பு வருகிது>
பாலஸ்தீனியத்தில் தேர்தல் நடந்து காமாஸ்(Hamas) பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ளது. யாசீர் அரபாத் கட்டி வளர்த்த Fatah கட்சி 43 ஆசனங்களைப் பெற, காமாஸ் 132 ஆசனங்களில் 76ஐப் பெற்று பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. வழமைபோல ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ரொனி ப்ளேயர், கனடாவின் வருங்கால பிரதமர் Stephen Harper வரை அனைவரும் மூக்கால் அழுதபடி இருக்கின்றார்கள். சனநாயகத் தேர்தல் நடந்தாலும் உள்ளே புகுந்து தமது பொம்மை அரசை நிறுவி குள்ளநரிச் சிரிப்பைச் சிந்துபவர்களுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கடினமாய்த்தான் இருக்கும். இந்த அரசியல் கனவான்கள் தங்கள் பேச்சினிடையில் அதிகம் பாவித்த சொல் 'பயங்கரவாதிகள்' என்பதுதான். சரி, சரி காமாஸும் அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களும் பயங்கரவாதிகள் என்று வைத்துக்கொண்டாலும், அப்படியாயின் இஸ்ரேலிய அரசாங்கத்தை என்னவென்று அழைப்பதாம்? நேற்று பிபிசியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, காமாஸ் அங்கே குண்டு வைத்தார்கள், இங்கே குண்டு வைத்தார்கள் என்று பிபிசி நிருபரும் மிகக் கஷ்டப்பட்டு தனது நடுநிலையை நிறுவிக்கொண்டிருந்தார் (பொதுமக்களை பலிக்கடாவாக்கும் தாக்குதல்களுடன் எவருக்குத்தான் உடன்பாடிருக்கும்?). ஆனால் ஒவ்வொரு இஸ்ரேலிய தேர்தல்களின்போது இஸ்ரேலிய அரசாங்கம் அங்கே குண்டுபோட்டார்கள், இந்த அகதிமுகாமை முற்றாக நிர்மூலமாக்கினார்கள் என்று ஏன் செய்திகளில் காட்டுவதில்லை என்பது நமக்கு ஞாபகத்துக்கு வருவதில்லை. வரவும் கூடாது.
கனடாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், கொன்சர்வேர்டிக் கட்சியின் உபதலைவர் Peter Mckay தாங்கள் அரசமைத்தால், விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்யப்போவதாக கூறியிருக்கின்றார் என்று ஆனந்தக் கூத்தாடும் கட்டுரை ஒன்றை வலைப்பதிவில் வாசித்திருந்தேன். சரி புலிகளைத் தடை செய்கின்றார்களோ அல்லது புலிகள் கனடாவுக்கு வந்து ஸொப்பிங் செய்கின்றார்களோ அந்த விடயத்தை இப்போதைக்கு விடுவோம் (எங்களுக்கு மட்டுமா ஷொப்பிங் செய்வதற்கும் கேர்ல்ஸை சைட் அடிப்பதற்கும் ஏகபோக உரிமை இருக்கா என்ன?) அந்தக் கட்டுரையைப் பூதக்கண்ணாடிப் போட்டு பார்த்தாலும் இலங்கை இராணுவம் செய்த 'நல்ல விடயங்கள்' ஒன்றையும் பெரிதாகக் காணவில்லை.
ஆனால் நமது மூத்த தோழர் ஷோபாசக்தி என்ன சொல்லியிருக்கின்றார்? 'நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன் என்றால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்' என்றல்லவா அவர் உறுதிமொழி எடுத்திருந்தார் (ஆனால் அவருக்கும் இந்தியா ரூடே போன்றவற்றிற்கு கருத்து/நேர்காணல் கூறும்போது, புலிகளை 100% எதிர்க்கின்றேன், இலங்கை அரசாங்கத்தை 0% அமுக்கி வாசிக்கின்றேன் என்றுதான் போர்மிலாவை மாற்றிப்போட்டு அசத்துகின்றார் என்பது வேறுவிடயம்). அப்படி எனில் இலங்கை அரசாங்கத்தை 100% வீதம் தடை செய்தால்தானே, புலிகளை ஆகக்குறைந்து 50% வீதமாவது கனடாவில் தடை செய்ய முடியும் என்றுதானே இந்த அரசியல் சூத்திரம் நிறுவுகின்றது.
என்னவோ போங்கள்? நமது கவிஞர்கள், கதைஞர்கள், நடுநிலைமைவாதிகள் 'மற்ற விடயங்களில்'தான் வீக் என்று இதுவரை கேள்விப்பட்டனான். இப்போது கணக்கிலும் வீக் என்பதும் புரிகிறது. சிலவேளை கணக்கில் புலி என்றால் பிறகு 'புலி முத்திரை' குத்திவிடுவார்களோ என்று பயந்துதான் இப்படி நடிக்கின்றார்களோ தெரியாது.
7 comments:
;-)
ஏதோ சொல்வார்களே, பிடிக்காத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றமென்று.
பேச்சுக்குப் போகவில்லையென்றாலும் கத்துவார்கள், போனாலும் கத்துவார்கள். ஏதாவது கத்திக்கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் பிரச்சினை.
இதற்குள், சிங்கள், ஆங்கில நாளேடுகளெல்லாம் சமாதானத்தை வலியுறுத்தி எழுதுகின்றனவாம் என்று வண்டில் விடப்படுது.
நீங்கள் சொன்னதுபோல் கணக்கில் மட்டுமில்லை, தமிழ் ஆங்கிலம் சிங்களம் எல்லாத்திலும் ஏதோ பிரச்சினை போலத்தான் இருக்கு.
கோட்டு சூட்டு போட்ட
குள்ள நரியெ ல்லாம்
காட்டை விட்டு இனி ஓடிடனும்!!!
காட்டை விட்டு இனி ஓடிடனும்!!!
விட்டு இனி ஓடிடனும்!!!
இனி ஓடிடனும்!!!
ஓடிடனும்!!
காமாஸ¤க்கு ஜே
ஜெய் காமாஸ்!!!-னும் உணர்ச்சி பூர்வமா வாசிக்கலாம்.. ;-)
-இப்ப டிக்கி
காமாசு
பாலஸ்தீனிய தேர்தல் முடிவு ஜனநாயகம் பேசும் இஸ்ரேல்சார்பு அரசுகளுக்கு இரண்டு உவமைகளைச் சுட்டும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது
1. திருடனுக்குத் தேள் கொட்டுதல்
2. தடியைக் கொடுத்து அடியை வாங்குதல்
சுதர்சன், மேலே போட்ட பாட்டை நன்கு இரசித்திருக்கின்றீர்கள் போலத் தெரிகிறது :-).
....
//பேச்சுக்குப் போகவில்லையென்றாலும் கத்துவார்கள், போனாலும் கத்துவார்கள். ஏதாவது கத்திக்கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் பிரச்சினை.//
வசந்தன் :-))).
....
காமாசு ப்ரோ, சோழியன் குடுமி சும்மாவா ஆடும் :-).
....
அனானிமஸ், அஃதே உண்மையாம்.
Post a Comment