Saturday, October 01, 2005

படம் பார்த்தது குறித்து படம் காட்டுதல்

கஜினி

முதலிலேயே கூறிவிடுகின்றேன். இதை எழுதுவதற்கு அஸின் மற்றும் அஸின் மட்டுமே காரணம். ஆங்கிலப்படத்தின் சாயலில்தான் இதை எடுத்திருக்கின்றார்கள் என்று வாசித்திருந்தேன். நான் அந்தப் படத்தை பார்க்காததால் எதுவும் சொல்வதற்கில்லை. மற்றப்படி மலையாள, தெலுங்குப் படங்களை அப்படியே மாற்றி தமிழில் எடுக்கும்போது எழாத முணுமுணுப்புக்களைப் போல ஆங்கிலப்படங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் படங்களையும் பார்த்துவிட்டு போகின்றேன் (தமிழில் எடுக்கப்பட்ட கமலின் சில படங்களை மூல ஆங்கிலப்படங்களை விடவும் மிகவும் இரசித்துப் பார்த்திருக்கின்றேன்) . நேர்மையான இயக்குநர்கள் என்றால் மூலத்தை குறிப்பிடச்செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.



கஜினி வழமையான ஒரு பொழுதுபோக்குப் படம். அதில் லொஜிக்குகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினால், படம் nothing என்று ஒருவர் இலகுவாய் நிரூபித்துவிட்டுப் போய்விடுவார். வழமையான 'தமிழ்க்கலாச்சார' ஆபாச குடும்ப செண்டிமெண்டல்கள் இல்லாமல் இருந்தது பிடித்திருந்தது. வன்முறைக் காட்சிகள் சிலவேளைகளில் மிக அதிகமாய் இருக்கின்றது. என்னைக் கேட்டால் சிறுபிள்ளைகளை இந்தப் படத்துக்கு கூட்டிச்செல்லவேண்டாம் என்றுதான் கூறுவேன். எங்களுக்கும் முன் சீட்டில் இருந்த சிறுவன் பயந்து பதட்டபடி இருந்ததைக் கண்டிருந்தேன்.

அஸினின் நடிப்பு மிக இயல்பாயிருந்தது ( When i was watching this movie, I thought if i've got a partner like Asin's character in this movie, would be more fun :-). Alright guys...நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது எனறு உங்கே திட்டுவது கேட்கிறது. சரி கனவாவது கணடுவிட்டுப்போகின்றேன்). நகைச்சுவைப் பகுதியை அஸினுக்கு கொடுத்தே விட்டதுமாதிரி இருந்தது; நன்கு சிரிக்க வைக்கின்றார். எனது ப்ளொக்கர் படத்தில் அஸினைப் போட்டதற்கு, 'அஸின் இப்படி நடித்திருக்கின்றாரே நீ அவரின் படத்தைப் போடலாமா?' என்று எவரும் கேட்கமுடியாத அளவுக்கு நன்கு நடித்திருக்கின்றார். நயந்தாரா ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை (இறுதியில் மழையில்) ஓடிக்கொண்டிருக்கின்றார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டி பயமுறுத்துகின்றார்கள் (வல்லவன் பட சர்ச்சையில் சிக்கியவுடன் நயந்தாராவின் உதடுகளைக் காட்டாவிட்டால் சிறைக்குள் போட்டுவிடுவோம் என்று யாராவது சொன்னாரகளோ தெரியாது).



ஒளிப்பதிவு மிக அருமை, ராஜசேகருடையது. இறுதிக்காட்சிக்காய் புதுவித கமரா பாவிக்கப்பட்டது என்றும், இரட்டை வேடங்களுக்கு அது மிகச்சிறப்பாக உதவும் என்றும் ராஜசேகர் கூறியதை எங்கையோ வாசித்தது நினைவு.

சிறுமிகளை வேலைக்கு என்று கூப்பிட்டு மும்பாய்க்கு (?) விபச்சாரத்துக்கு அழைத்துச் செலகையில் அஸின் அவர்களைக் காப்பாற்றி விட்டு வில்லனிடம் கூறுவார்... "பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சினைகள்....மடாதிபதிகள், வைத்தியர்கள், வக்கீல்கள், வேலை செய்யும் இடங்க்ள்.....இப்பதானேடா பெண்கள் சமையலறைக்குள் இருந்து வெளியுலகத்துக்கு வரத்தொடங்கி இருக்கின்றார்கள்....இப்படியெல்லாம் நீங்கள் செய்யத்தொடங்கினால், மீண்டும் சமையலறையே போதும் என்று அவர்கள் முடங்கிவிடவல்லவா போகப்போகின்றார்கள்' என்று (இது எனது short term memory lostல் இருந்து loss பண்ணாமல் எழுதியது; முற்று முழுதாகச் சரியானதல்ல). அப்படிக் கேள்வி கேட்டது மிகவும் பிடித்திருந்தது (அது வில்லனுக்கு மட்டுமல்ல; படம் பார்த்துக் கொண்டிருந்த நம்மையும் பார்த்துத்தான்). அதுவும் அஸின் வாயால் கேட்டது.......



எல்லாப் பெரிய விசயங்களும் சின்னக் கேள்விகளிருந்துதானே ஆரம்பிக்கின்றது.


(இந்தப்படங்களும், அரைகுறைப் பதிவும் அஸினுக்கு)
p.s: These photos are not related to the movie, Kajani and thankx to asinonline.com

7 comments:

ஜென்ராம் said...

அசின் இன்றி ஓரணுவும் அசையாது.

இளங்கோ-டிசே said...

//அசின் இன்றி ஓரணுவும் அசையாது. //
:-)))

ரவி ஸ்ரீநிவாஸ் said...

When i was watching this movie, I thought if i've got a partner like Asin's character in this movie, would be more fun :-).

DJ the question is whether a girl with similar or same charcters would think if she had got a partner like DJ it would be more fun :-).of u know the answer:-).

Anonymous said...

கொஞ்ச நாளைக்கு முந்திப்பார்த்த எம்.குமரன் சன் ஓஃப் மஹாலக்ஷ்மி, உங்க ரசனை சரின்னுதான் சொல்லுது! நடந்துங்க ராசா நடத்துங்க!!

சூர்யாவைப்பத்தி ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். :(

-இங்கனம் சூர்யாவின் மொன்ரியல் ரசிகை(சூர்யா தவிர இன்னும் அரை டசின் தமிழ் நடிகர்களுக்கு அவ ரசிகை எண்டதை சூர்யாட்ட சொல்லிராதீங்க.)

Anonymous said...

A sin

இளங்கோ-டிசே said...

//DJ the question is whether a girl with similar or same charcters would think if she had got a partner like DJ it would be more fun :-).of u know the answer:-). //
That is true Ravi. The sad thing is, No one raises this question by her selves yet. What a tragedy :-(.
.....
//சூர்யாவைப்பத்தி ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். :(

-இங்கனம் சூர்யாவின் மொன்ரியல் ரசிகை(சூர்யா தவிர இன்னும் அரை டசின் தமிழ் நடிகர்களுக்கு அவ ரசிகை எண்டதை சூர்யாட்ட சொல்லிராதீங்க.) //
சூர்யாவின் மொன்றியல் இரசிகை அவர்களே! இந்தப் பதிவில் ஆரம்ப வசனத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் (Asin and Asis only), நான் ஏன் சூர்யாவைப் பற்றிக் கூறவில்லை என்பது. சூர்யாவின் பற்றிக் கூறாதற்கு அவரின் ரொறண்டோ இரசிகை ஒருவரும் தொலைபேசியில் கண்டனந்தெரிவித்திருந்தார். எனவே நீங்களிருவரும் படம் பார்த்தவுடன் (Surya and Surya only) பதிவுகள் போட்டு உங்களை மகிழ்ச்சிப்படுத்தலாம் :-).
.....
//A Sin//
As & In = Asin (is Everywhere) என்று பிரித்துப் பார்க்கவேண்டியதை A Sin என்று பிரித்து எழுதிய அனானிமஸைக் அஸின் சார்பாகக் கண்டிக்கின்றேன் :-).

குழலி / Kuzhali said...

நீங்களும் நம்ம அசின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்துடுங்க,

இப்படிக்கு
அகில உலக கனடா கொண்டார் அசின் ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன்.