
'இது இருளல்ல
அது ஒளியல்ல
இரண்டோடும் சேராத பொன்நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்'

ரொறொண்டோவில் வலைப்பதிவர் சந்திப்பு நடந்தபோது, அதைக் குழப்புவதற்காய் பெயரிலியும், கார்த்திக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியுனூடாக ஊடுருவ முயன்றது நண்பர்கள் அனைவரும் அறிந்ததே. இவர்களது ஊடுருவலை நடத்தவிடாது கடும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, எமது வலைபதிவு சந்திப்பு வெற்றிகரமாக நடக்க உதவியவர், அஞஜலீனா ஜோலீ (Anjalina Jolie ). அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாய் அவரது மெழுகுப்பொம்மை நயாகரவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதையே மேலே காண்கின்றீர்கள்.

இதை ஊரில் பூநாறி (அல்லது பீநாறி?) என்று அழைப்பதார்கள். ஈழத்தில் எங்கள் வீட்டுக்கருகில் பற்றைகளாய் படர்ந்து நின்றது நினைவில் இருக்கின்றது. நயாகராவை அழகுபடுத்துவதற்காய், இந்தச் செடியை அழகாய் கத்தரித்து பராமரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

CN Tower
7 comments:
கடைசியாகப் போட்ட படத்திலிருப்பதை நாங்கள் நாயுண்ணி எண்டு சொல்லிறனாங்கள். அதின்ர பழம் நாயில இருக்கிற பெரிய கறுத்த உண்ணிமாதிரியிருக்கும். ஆனா நல்ல சுவை.
அங்க ஆரும் உதைக் கவனத்திலயெடுக்கிறேல. விரும்பத்தகாத பத்தையாத்தான் இதப் பாக்கிறது. ஆனா சிலநாடுகளில நிறையச் செலவழிச்சு, நல்ல வடிவா நட்டு வச்சிருக்கிறாங்கள்.
கொழுவி, இதையா நாயுண்ணி என்றும் கூறுவது? வந்திருந்த உறவுக்காரனும் எதோ ஒரு சிங்களப்பெயர் கூறினான் (அவன் படித்தது சிங்கள் மீடியத்தில் என்றபடியால், அவனுக்கும் சரியாக தமிழில் எப்படி அழைப்பது என்று தெரியவில்லை). இந்த மரத்திலும் கறுப்பாய் பழங்கள் இருந்தன. நாங்களும் ஊரிலிருக்கும் போது அந்தப்பழத்தைச் சாப்பிட்டது உண்டு.
அது நாயுண்ணிதான். நாங்களும் ஊரிலே இருந்தபோது அல்ல ஆனால், நின்றபோதும் நடந்தபோதும் பிடுங்கினபோதும் அந்தப்பழங்களைத் தின்றதுண்டு. கிட்டத்தட்ட berrys வகையிலே போடலாம்
ஆஞ்சலினா ஜூலி என்று Lara Croft இன் சிலையினைப்போட்ட பதிவாளர் பதி வாழாரென அமெரிக்க ஊடுவிகள் சார்பிலேயும் அக்கா அனிஸ்ரன் ஊர்க்குருவிகள் சார்பிலேயும் வன்மையாகவும் தன்மையாவும் தண்மையின்றித் தெரிவித்துக்கொள்கிறோம்
அ.ஊ.நிறைவேற்றுப்பணிப்பாளர்
அங்கே நாயுண்ணி வடிவத்தில் வூடுருவி இருந்தது நாம்தான். அது தெரியாமால் எம்மை போட்டோ புடித்த டீசே வுக்கு ஐஸ்க்ரீம் கிடைக்காமல் போனது சரியே.
இப்படிக்கி,
நாயுண்ணி
ஜூலியின் ரசிகனான எனக்கே அடையாளம் தெரியாத வகையில் அந்தச் சிலை இருப்பதால் அதைப் புகைப்படம் எடுத்து படம் காட்டி ஜூலியின் புகழைகுறைக்க முயன்ற டீஜேவைக் கண்டிக்கிறேன்.
அ...ஆ...வுக்கு பயப்பிடாத நாங்களா அஅஅ....ஊஊஊஊ (கராத்தே ஸ்ரைலில் கத்தினாலும்) புறமுதுகு/முன்வயிறு காட்டி ஓடுவோம் என்று எண்ணுகின்றீர்கள்? இந்தப்படம் போட்டவுடன் பயமுறுத்தல்கள் வரும் என்று நினைத்துத்தான் அஞஜலீனா ஜூலியை கனடாவில் அல்பேர்ட்டா மாநிலத்தில் தற்சமயம் குடியமர்த்தி வைத்திருக்கின்றோம். அக்கா அனிஸ்ரன் 'Break up' sweet heartடுடன் டேட்டிங் செய்வதால், ஜூலியைத் திட்டக்கூடது என்று Baby Pitt கிளப் சார்பாக அன்புடன் மிரட்டுகின்றோம். தங்கமணி இது அ. ஊவுக்கு ஆதரவா அல்லது அ.ஊ.எ. க்கு (அமெரிக்கா ஊடுருவல் எதிர்ப்பணியினர்)ஆதரவா என்று நீங்கள் முடிவெடுக்கும் முக்கிய தருணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
See this:
http://www.aruchuna.com/Natural/natural%20%20flowes/flower/photos/photo56.jpg
Post a Comment