சென்ற ஞாயிற்றுக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு, ஜரோப்பாவில் இருந்து வந்திருந்த உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். நயாகராவுக்கு நான் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. இப்படித்தான், சில மாதஙகளுக்கு முன் ''ஒருவருக்கு' வேறு நகரத்திலிருந்து நயாகராவுக்குப் பயணம் செய்தபின் ஒரு 'நல்ல செய்தி' அவர் நெஞ்சில் நயாகராவாய்ப் பாயத்தொடங்கியதாம். எனக்கு நயாகரா பாயாவிட்டாலும், நெஞ்சில் ஒரு குற்றாலமாவது பாயட்டும் என்று ஆசைப்பட்டுத்தான் புறப்பட்டேன். நல்ல 'சகுனமாய்' நான் நயாகராவில் நின்ற சமயம், நயாகரா நீர்வீழ்ச்சிக்காரர் தொலைபேசியில் அழைத்து சுகமும் விசாரித்திருந்தார். அவர் யார் என்று நீங்கள் ஆவலாகக் கேட்பது புரிகின்றது. அவர் 'யாராக இருந்தால் என்ன' என்றெழுதிய பின்னூட்டத்தை விளங்கியவருக்கு மட்டும் இந்த உண்மை தெரியுமாம் :-).
கனடாவுக்கு சொந்தமான நீர்வீழ்ச்சி
தண்ணீரில் மிதக்கும் படகு
அமெரிக்காவுக்கு சொந்தமான நீர்வீழ்ச்சி
விரைவில் ஆவலோடு எதிர்பாருங்கள்!!! Niagara Visit - Aftermath வர்ணச்சித்திரம் காட்டப்படும்.
5 comments:
with nayanthara of DJ
// இப்படித்தான், சில மாதஙகளுக்கு முன் ''ஒருவருக்கு' வேறு நகரத்திலிருந்து நயாகராவுக்குப் பயணம் செய்தபின் ஒரு 'நல்ல செய்தி' அவர் நெஞ்சில் நயாகராவாய்ப் பாயத்தொடங்கியதாம்//
அண்ணே, உங்க கண்ணில், 5 ,6 தடவை நயகாராவுக்கு போயிட்டு வந்து சிவெனேன்னு மூலையில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியமாட்டாங்களா?
//அண்ணே, உங்க கண்ணில், 5 ,6 தடவை நயகாராவுக்கு போயிட்டு வந்து சிவெனேன்னு மூலையில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியமாட்டாங்களா?//
கார்த்திக், நானும் அப்படித்தான் கவலைப்படாதையும். வாரும் கெதியாய் இமயமலைக்கு ஏறுவம். எங்களுக்கு அந்தக் கொடுப்பினைதான் இருக்கிறது போல :-))).
இதிலே அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சொந்தமான நீர்வீழ்ச்சிகளை காட்டி விட்டு எனக்கு சொந்த மான வீழ்ச்சியைக் காட்டாமல் இருட்டடிப்பு செய்தது ஏதோ
அதைத்தானே இங்கே படம் எடுத்து போட்டிருக்கின்றேன்...முதற்படத்தைக்கவனமாய்ப் பாரும்!
Post a Comment