Friday, September 23, 2005

'LOVELY'

நேற்று, ரொரண்டோ நகருக்கு ஜெசிக்கா பார்க்கர் (Jessica Parker), தனது சொந்தத் தயாரிப்பான fragrance லவ்லியை (Lovely) அறிமுகஞ் செய்வதற்காய் வந்திருந்தார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற நாடகத் தொடரான Sex and the Cityயில் நடித்த முக்கியமான நான்கு பெண்மணிகளில் ஒருவர்.

P9210002
நிஜம்

நான் இவரைப் படம்பிடிப்பதற்காய் எனது படப்பெட்டியைக் தூக்கிக்கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம் 'ப்ரோ' பெயரிலி. அவர் இன்றைய கால spicy girlsயான கே.பி.சுந்தரம்பாளையும், மதுரத்தையும் விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பதால், இல்லை ப்ரோ கடந்தகாலத்திலும் hot/coolயாய் பெண்கள் இருந்திருக்க்கின்றார்கள் என்பதைப் புரிய வைக்கத்தான். 'மகன் தந்தைக்காற்றும் உதவி...' என்பதற்கிணங்க, நான் 'ப்ரோவுக்கு ப்ரோ ஆற்றும் உதவி...' என்று இப்படி படம் காட்டியதால் (('ஆற்றும்' என்று நான் இங்கே கூறியவுடன், தங்கமணி, டிசே தேநீரைத்தான் ஆற்றச்சொல்கின்றார் என்று சமையலறைக்குப் போகாவிட்டால் சரி)), பெயரிலி அவர்கள் ஜெசிக்கா பார்க்கருக்கு சற்று முன்பான 50ம் ஆண்டுகளில் கொடிகட்டிப்பறந்த Ciara, M.I.A போன்றவர்களின் படங்களை எனக்காய் எடுத்து போடவேண்டுமென்று அன்புக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

P9150031
நிழல்; வெள்ளியாக ஜெசிகாவின் காதடியில் மினுங்குவது எனது புன்சிரிப்பே அன்றி, படப்பிடித்தலின் பிழை அல்ல

ஜெசிக்கா பார்க்கரைப் நேரில் பார்ப்பதைவிட, வந்திருந்த கூட்டதை பார்ப்பது சுவாரசியம் நிறைந்தது. அதிலும் பதின்மவயதுப்பெண்கள்... ஜெசிக்கா பார்க்கரைக் கண்டவுடன் கூக்குரல் இட்டு அலறியவர்கள் எத்தனை பேர்? காதலாகிக் கசிந்து ஆனந்தக்கண்ணீர் மல்கியவர்கள் எத்தனை பேர்? ஜெசிக்கா பார்க்கரிடம் சென்று கையெழுத்து வாங்கி வந்த ஒரு பதின்மவயதுப் பெண்கள் குழுவிடம், ஜெசிக்கா எப்படிக் கதைத்தார் என்று எனக்குப் பக்கத்தில் நின்றவர் ஒருவர் வினாவ, ஒரு பிள்ளை கண்ணீரோடு ஒரு காவியம் சொல்லியதே..... அடடா அந்தக்குரலுக்கும், வா(ர்)த்தைகளோடு அசைந்த நயனங்களுக்கும் ரொறண்டோவை அப்படியேஎழுதிக்கொடுத்துவிடலாம் போல அந்தக்கணத்தில் தோன்றியது.

P9210007

ஜெசிகா பார்க்கருக்கு படம் காட்டுகிறேன் என்று ஆரம்பித்து வேறு எதையோ எல்லாம் கதைக்கின்றான் என்று நீங்கள் நினைக்கக்கூடும். யோசித்துப் பார்த்ததில் எனக்கும் ஜெசிகாவுக்கும் இரண்டு ஒற்றுமைகள் இருக்கின்றது என்று புரிந்தது. ஒன்று அவரும் என்னை மாதிரி சற்றுக் குண்டாக இருந்தது. மற்றது என்னைப் போலவே மிகவும் பிரபல்யம் வாய்ந்த நபராக இருப்பது.

P9210011
ஜெசிக்கா கையெழுத்துப் போடுகையில்

11 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அடடா அந்தக்குரலுக்கும், வா(ர்)த்தைகளோடு அசைந்த நயனங்களுக்கும் ரொறண்டோவை அப்படியேஎழுதிக்கொடுத்துவிடலாம் போல அந்தக்கணத்தில் தோன்றியது

Why only toronto why not a place in DJ's heart :)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'மகன் தந்தைக்காற்றும் உதவி...'

மகன் DJ தந்தை Thangamani :)

இளங்கோ-டிசே said...

//Why only toronto why not a place in DJ's heart :)//
Of course Ravi. My heart was given instantly when she throws a glance at the first place :-). Sometimes i wonder, when i start to re-assemble my heart one day, where will all the pieces be? (infinity pieces at infinity places :-) )

சினேகிதி said...

She was @ the Brampton mall last week but it wasn’t packed though.

Anonymous said...

Sex and City yil.. மூன்று பெண்மணிகள் அல்ல, நான்கு :)

Carrie
Samantha
Miranda
Charlotte

உங்க புன் சிரிப்பு நல்லா இருக்கு.

SnackDragon said...

ப்ரோ லவ்லி போஸ்ட் ப்ரோ. நல்ல வேளை ஜெஸிகாவிடம் கனடா போகும் முன்னரே சொல்லியிருந்தேன், உங்களிடம் உசாராக இருக்கும் படி.


இன்னிக்குன்னு பாத்து யாரோ எழுதிய "தமிழர்களுக்கு சினிமா மேல அன்பு ஜாஸ்தி" ங்குற பதிவ நான் படிக்கலை படிக்கலை படிக்கவே இல்லை :-)

இளங்கோ-டிசே said...

//Sex and City yil.. மூன்று பெண்மணிகள் அல்ல, நான்கு :)

Carrie
Samantha
Miranda
Charlotte//
Thankx for your correction Anonymous (level 3?). I only watched 'sex and the city' once or twice (not fully hours though). I would do corrections above soon. BTW, Toront'onions', don't forget to turn on ur tv coming Sunday. I heard that they're going to telecast second season of 'Desperate Housewives'. (Last season i only watched once, This time i don't wanna miss anyone of them). Hope Eva will be showing herself in Toronto soon :-).
.....
//She was @ the Brampton mall last week but it wasn’t packed though.//
Yah, thatz 2 bad. May be Brampton ppl don't have taste like Toront'onions'.

Anonymous said...

//ஜெசிக்கா பார்க்கரிடம் சென்று கையெழுத்து வாங்கி வந்த ஒரு பதின்மவயதுப் பெண்கள் குழுவிடம், ஜெசிக்கா எப்படிக் கதைத்தார் என்று எனக்குப் பக்கத்தில் நின்றவர் ஒருவர் வினாவ, ஒரு பிள்ளை கண்ணீரோடு ஒரு காவியம் சொல்லியதே..... அடடா அந்தக்குரலுக்கும், வா(ர்)த்தைகளோடு அசைந்த நயனங்களுக்கும் ரொறண்டோவை அப்படியேஎழுதிக்கொடுத்துவிடலாம் போல அந்தக்கணத்தில் தோன்றியது.//

அடடா, நானாயிருந்தால் டொரோண்டோ என்ன, இதயத்தில் இருக்கிற 2 1/2 ஏக்கரையும் கொடுத்து, உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து வந்திருப்பேன்...

உங்கள் புன்சிரிப்பு ரொம்ப வெள்ளையாக இருக்கிறதைக் கண்டு நான் மிக ஆச்சர்யப்படுகிறேன்.

Anonymous said...

vellai sirippu and kalla manam DJ-kku-nnu solreengalaa NT?
:)

இளங்கோ-டிசே said...

கார்த்திக், பார்த்தீங்களா.....ஒரு ஜெஸிக்கா பார்க்கரைப் போட்டவுடன் எப்படி எங்கடை ப்ரோ பதிவு, படம், பின்னூட்டம் என்று எதுவும் இல்லாமல் மயங்கிக் கிடக்குகிறார் என்று :-). தங்கமணி, படிக்கும்போது கேள்விப்பட்டனான், இதயத்தை வெளியே எடுத்து விரிய வைத்துப்பார்த்தால், ஒரு மேசையினளவுக்கு விரியக்கூடியது என்று. ஆனால் இப்போதுதான் கேள்விப்படுகின்றேன், 2 1/2 ஏக்கர் பெரிய இதயத்தைப் பற்றி. எதற்கும் கின்னஸ் புத்தகத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்துவிடவும்.
....
//vellai sirippu and kalla manam DJ-kku-nnu solreengalaa //
இதைப் பார்த்தால் யாரோ எனக்கு நன்கு தெரிந்தவர் கூறுவது மாதிரி இருக்கின்றதே :-).

SnackDragon said...

ப்ரோ, உண்மையா கொடுக்க முடியாதவங்கதா இப்பிடி எல்லாம் கதை அளப்பாங்க, கண்(டு)டிக்காதீங்க ப்ரோ.