Thursday, September 15, 2005

சாப்பாட்டுப் பரிசுப் போட்டி

நள்ளிரவில் வீட்டை விட்டுத்துரத்தப்பட்ட இந்த பாவாத்மா யார்?

unknown

இந்த பாவாத்மா யார் என்றும் அவர் வீட்டை விட்டுத்துரத்தப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்றும் சரியாகப் பதில் கூறும் மூன்று நபர்களுக்குப் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

முதலாம் பரிசு: மதி வைத்துத்தரும் கத்தரிக்காய்ப் பாற்கறி
இரண்டாம் பரிசு: பெயரிலி காலையில் திருடிச்சாப்பிடும் நித்திலனின் சீரியல்
மூன்றாம் பரிசு: தங்கமணி ஆபிஸில் பதுக்கி வைத்திருக்கும் 'வாயப்பயம்'

ஆகா, புதையல் மீண்டும் கிடைத்துவிட்டது. தலையங்கத்தை மாற்றி விட்டிருக்கின்றேன் . இனி மலையாள மாந்திரீகம் எல்லாம் செல்லாது :-)

15 comments:

Anonymous said...

பாரிபாலாஜி

Anonymous said...

ரவி ஸ்ரீனிவாஸ்??

இளங்கோ-டிசே said...

முயற்சி திருவினையாக்கும்! (பரி-சோதனை)

SnackDragon said...

என்ன தம்பி நேத்து பாரீசை படம் எடுத்தன் விளைவா? நேத்து என்ன குளிரில் தூங்கினீர்களா? ;-)

Thangamani said...

//பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்//

ஊரில் ஒரு பழமொழி உண்டு. "ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" அப்படீன்னு. அல்லது கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடைக்கிறதையும் சொல்லலாம்.

பார்த்தா பெயரிலி மாதிரி இருக்கு!

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

தங்கமணி நீங்கள் போட்டிகள் எதிலும் கலந்துகொள்வதில்லைப் போல. போட்டிகளின் விதிமுறைகளை வாசித்தால், அதில் கூறப்பட்டிருக்கும், நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களோ, அவர்களது உறவினர்களோ போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது என்று. அதுமாதிரித்தான், இந்தப்போட்டியில் பரிசு வழங்கத் சம்மதித்துள்ள ஸ்பொன்சர்களின் படங்கள் இங்கே போட்டிக்குப் பிரசுரிக்கப்படமாட்டாது :-).
.....
பெயரிலியும், இரவியும் பின்னூட்டஙகளைப் போடுவதும், அழிப்பதுமாய் இருப்பதால், இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க எனது இல்லீகல் அட்வைஸர் மதியுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றேன். உதவி மேலதிகமாய்த் தேவைப்படும்போது, இன்று என்னோடு இணைந்துள்ள அமெரிக்கா வாழ் இல்லீகல் அட்வைஸர் கதிர்காமஸ் கனடாவுக்கு வரவழைக்கப்படுவார் என்பதையும் மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றேன்.

Anonymous said...

என்னப்பா படத்தை காணவில்லை எண்டு தேடின்னான். இப்ப தான் வந்திருக்கு

-/பெயரிலி. said...

வசந்தன்

Anonymous said...

Yaaraiyaa antha annoyance? sorry annonymous-u??

-/பெயரிலி. said...

பாரி அது Annoying Mouse போலத்தான் இருக்கிறது.

வசந்தன்(Vasanthan) said...

நான் துரத்தப்பட்ட படம் உமக்கு என்னெண்டு கிடைச்சது?

இளங்கோ-டிசே said...

சிலர் கிட்டத்தட்ட சரியான விடையைச் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் வீட்டை விட்டு துரத்தப்பட்டதன் காரணத்தையும் கூறினால்தான் பரிசு தரப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
......
அத்துடன் இன்னொரு நல்ல செய்தி. பலர் உற்சாகாமாய் இந்தப்போட்டியில் பங்குபற்றுவதால், மதி கத்தரிகாய்ப் பாற்கறியுடன், இந்த வாரம் காய்ச்சுகின்ற கூழையும் இலவச இணைப்பாக தருவதாக சற்றுமுன்னர்தான் தெரிவித்துள்ளார் என்பதையும் அறியத்தருகின்றேன்.

Anonymous said...

The person in the photo is Ulaga Azhagi Aishwarya Rai!!!

முகமூடி said...

// பார்த்தா பெயரிலி மாதிரி இருக்கு! //

முதல்ல பெயரிலி ஆண் பிள்ளையா பெண் பிள்ளையான்னு சொல்லுங்கப்பா... கொயப்புறீங்களே...