-காலம் சிறப்பிதழ் வெளியீடு & புத்தகக் கண்காட்சி-
ஜூன் 09, 2007
சிவத்தம்பிக்காய் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிலவருடங்களுக்கு முன்பாய் மூன்று நாட்கள் (?) நடந்த கருத்தரங்கிலிருந்தும், சிவத்தம்பி கூத்துப்பற்றி விபரமாய்க்கூறும் ஒளிப்படமும் காட்டப்பட்டது. இவற்றிலிருந்து நிறைய விபரங்களை சிவத்தம்பி குறித்து அறிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது. முக்கியமாய் கூத்துப்பற்றி அவர் விபரமாய் உரையாடுவது பல விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் அழைத்துச்செல்லக்கூடியவை. கூத்துப்பற்றிய சிவத்தம்பியின் விபரணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இப்படி ஒரு தமிழர் அழகாய் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கின்றாரே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது முடிவில் இயக்கம் தர்மஸிறி பண்டாரநாயக்கா என்று போடப்பட்டபோது, அட அதுதானே என்ற உணர்வு மனதிற்குள் வந்ததையும் குறிப்பிடத்தான்வேண்டும்.
'காலம்' - சிவத்தம்பி பவளவிழா (+ தாசீசியஸ் இயல்விருது) சிறப்பிதழ் வீ.அரசுவினால் வெளியிடப்பட்டபோது...
சிவத்தம்பியின் பால்ய நணபரொருவர், வீ.அரசு, சந்திரகாந்தன் அடிகள் & தாசீசியஸ்.
வந்திருந்த பார்வையாளர்களில் ஒருபகுதி.
உ.சேரன்
'காலம்' புத்தகக்கண்காட்சியில்...
(நன்றி: Photos by Ramanan - looktamil.com )
இம்முறை விரும்பிய சில புத்தகங்கள் கிடைத்திருந்தன, சில வாங்கமுடியாமற்போயின. சாருவின் 'ராஸலீலா' வாங்கவேண்டும் என்ற ஆவலில் (சாரு எனக்கு தனிப்பட்டு அறிவுறுத்தியபடி :-) ) 'காலம்' செல்வத்திடம் கேட்டபோது, வந்திருந்த ஒரு பிரதியையும் யாரோ ஒருவர் வாங்கிச் சென்றுவிட்டார் என்று கையை விரித்திருந்தார். ஜெயமோகனின் 'கொற்றவை' வாங்கவேண்டும் என்ற விருப்பை அதன் விலை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது :-(.
சில புத்தகங்கள்
(1) வடு - கே. ஏ. குணசேகரன்
(2) மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக்கவிதைகள்) - தமிழாக்கம்: வ.கீதா- எஸ்.வி.ராஜதுரை (தேடிய ஒரு நூல் கையில் கிடைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி)
(3) புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ (மொ-பெ:சா.தேவதாஸ்)
(3) அக்கரைக்குப் போன அம்மாவுக்கு - ஹம்சத்வனி (ஈழத்துக்கவிஞர், 80களின் ஆரம்பத்திலும் மத்தியிலும் தீவிரமாய் இயங்கியிருக்கிறார். தமிழ்ச்செல்வன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தற்சமயம் கனடா, மொன்றியலில் வசித்துவருகின்றார் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து பேசப்படும் ஒன்றிரண்டு ஈழத்து மையப்புள்ளி கவிஞர்களால் காலம் புதைத்த ஒரு கவிஞராக இவர் இருக்கக்கூடும். ஹம்சத்வனியின் சில தொகுப்புகளை வாசித்திருக்கின்றேன். 80களின் ஈழக்கவிதைகளோடு வைத்துப்பார்க்கும்போது அலட்டடில்லாது நல்ல கவிதைகளை எழுதியிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது)
(5)பெண் வழிகள் (மலையாளப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)- தமிழில்: சுகுமாரன்
(6) கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா
3 comments:
m....thank you
டிசே அண்ணை,
உதிலை எத்தனை காசுக்கு வாங்கினது, எத்தனை களவெடுத்தது என்ட விபரத்தை ஏன் மறைச்சனீங்கள்..:-(((
சோமி: நீங்களாவது சிலவற்றையாவது ஆவணப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.
அநாமதேய நண்பர்: மேலேயுள்ள படங்கள் களவெடுத்ததுதான், நான் எடுத்தவை அல்ல. புத்தகங்கள் எல்லாம் காசு கொடுத்துவாங்கியதுதான்; அல்லாவிட்டால் செல்வத்திடம் கடனுக்கு என்று கூறிவிட்டு எடுத்துவரவேண்டியதுதான். ஆனால் அது அறவிடப்படமுடியாத கடனாய்த்தான் போகும் என்பதுதான் கவலையான விடயம் :-).
Post a Comment