June 24, 2007
Unstoppable: மேலதிக விபரங்களுக்கு
Pride Paradeற்குப் போய் படங்களை ஆரம்பக்கட்டத்தில் எடுத்துக்கொண்டிருந்தபோதே புகைப்படப்பெட்டி என்னோடு மல்லுக்கட்டத்தொடங்கியது. சென்றவருடம் கரீபானாவில் அழகாய் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை zoom செய்து படமெடுத்துக்கொண்டிருந்தபோது குறுக்காலை நடந்துபோன இன்னொரு பெண் தவறுதலாகத் தட்டியதால் அப்படியே சீமெந்துத் தரையில் கமரா விழுந்திருந்தது. திருத்தியெடுத்திருந்தாலும் முன்னர் போல இயங்குவது இல்லை; விலை சற்று அதிகமாய் வாங்கியதால் உடனே குப்பையில் எறியவும் மனமில்லை. எனவே இன்றும் ஆரம்பக்கட்டத்தோடு புகைபடப்பெட்டி உறங்குநிலைக்குப் போயிருந்தது. ஏதோ கொஞ்சப்படங்களாவது எடுக்க முடிந்ததே என்றவளவில் ஆசுவாசப்படவேண்டியதுதான்.
6 comments:
"பாவி"களைப் படம்பிடிப்பது கர்த்தருக்கே பிடிக்கையில்லை பாரும். இனியாச்சும் எங்கையாச்சும் நல்ல ரெலிஎவாஞ்சலிஸ்டா பாத்து சுவிஷே(ஷ)ம் கேட்டு ரட்ஷகம் வாங்கிற வழியைப் பாரும்.
ம்ம்ம்....... :-)
நீர் ம்ம்ம்ம் சொலிக் கொடுப்புக்குள்ளை சிரிச்சாலுங்கூட, கர்த்தர் உம்மிலை காட்டா பிளேன்ரி காட்டமாத்தானிருக்கிறார் காணும். உங்கட ஊர் லிட்டில் புஷ் (aplogies comedy central) உம்மைக் கவனிக்கிற விதத்திலை கவனிப்பாரெண்டு நம்புறன்.
எங்கள் ஊர் குட்டி புஷ், ஏற்கனவே லிபரல் கட்சி கொண்டுவந்த ஒரினப்பாலார் திருமணம் செய்தல் சட்டப்படியாகும் என்ற சட்டத்தையே இல்லாமற்செய்வது என்றுதானே கங்கணம்கட்டிக்கொண்டிருக்கின்றார். என்ன பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாது பாராளுமன்றத்தில் தள்ளாடுவதால் இப்போதைக்கு அமைதியாய் இருக்கிறார். அவ்வளவுதான்.
என்னது.. உங்க ஊரிலயுமா! இதப் பார்த்தீங்க தானே?
இதென்ன ஓரினச் சேர்க்கையாளர் தினம் மாதிரி ஏதாவதா?
பொன்ஸ், சுட்டிக்கு நன்றி. ஜெருசலத்தில் நடந்த அதேபோன்ற paradeதான் இதுவும்.
....
ரொரண்டோவில் 25 வருடங்களுக்கு மேலாய் இது நடந்துவருகின்றது. கனடாவில் நடப்பதில் இதுவே பெரிய நிகழ்வாகும். Gay, Lesbian, Bisexual & Transgender என்ற அனைத்து விளிம்புநிலை மனிதர்களையும் இது உள்ளடக்குகிறது. பல்லாயிரக்கணக்கோர் இந்நிகழ்வுக்கு பங்கேற்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும் வருவதால் இம்முறை கிட்டதட்ட 80 மில்லியன் வருமானம் ரொரண்டோவிற்கு கிடைத்திருக்கிறது என்று பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.
Post a Comment