-தமிழ்ச்செல்வியை முன்வைத்து-
ஷ்ரேயா (தமிழ்ச்செல்வி) அறிமுகமாகும் காட்சி நமது தமிழ்ப்பண்பாட்டிற்கு முன்னுதாரணமாய்க் கொள்ளக்கூடியது. ஓம்...(இது கந்தன் அருளிய பிரணவமந்திரம் அல்ல) கோயில்தான் ஷ்ரேயா அறிமுகமாகின்றார். அவர் அந்தப்பொழுதில் அணிந்திருந்தது சேலையா அல்லது half--saree யா (பாவாடை& தாவணியா) என்பது ஆழமான ஆய்வுக்கு வழிகோலக்கூடியது.
இரண்டாவது காட்சியில் ஷ்ரேயாவைப் 'பொண்ணு பார்க்கப்படுவதனான படலத்தில்' ஆடுகின்றார், பாடுகின்றார்..அவ்வாறு எங்களைப் பயமுறுத்திப் பார்த்துத் தோற்கின்றார். படத்தில் முதல் முதலாக அவரது இடுப்புத் தாவணி கொஞ்சம் விலகுகிறது.
அடக்க ஒடுக்கமாய் சாறி கட்டும் தமிழ்ப்பெண்ணாகவிருக்கும் ஷ்ரேயா (அதனாற்றான் சிவாஜி சார் காதலிக்கிறார்). சிவாஜியின் காதலியானவுடன் இடுப்பு இன்னபிற cleavages தெரிய ஆட்டமாடுகின்றார். இதன் மூலம் தமிழ் கலாசார பெண்கள், ஆண்களைக் காதலிப்பார்களாயின் அவர்களுக்கு எந்த (அரைகுறை) ஆடையும் அணியும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற போதனையை இப்படம் கற்றுத்தருகின்றது. காதலித்தவுடன் உரிமை, உடமை, பொஸஸ்சிவ்னெஸ் இருபாலார் 'இடை'யும் கூடுமென்று அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள். ஆனால் நமது தமிழ்க் கலாசாரத்தில் தொப்புள் என்ன பரப்பளவில் தமது காதலிகளுக்கு இருக்கின்றது என்று பொதுவெளியில் காட்டவும் தயங்காத மிகத் திறந்த மனதுடையவர்களாக தமிழ் ஆண் சிங்கங்கள் இருக்கின்றார்கள் என்பதை இப்படம் தொப்புள் சாட்சிகளுடன் ஆவணப்படுத்துகின்றது. அந்தளவில் கல்தோன்றா மண்தோன்றா மூத்த குடிகள் நாமென்பதையும் நாகரிகத்தைப் பிறருக்கு கற்றுத்தந்தவர்கள் நாமே என்ற வரலாற்றை மீளவும் தூசி தட்டவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
ஜோசியத்தின்படியே எல்லாம் நிகழும் என்றபடியால், நீங்கள் காதலித்தாலும் ஜோசியம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டும். டீப்பாய் காதலித்தால் என்ன, ரிப்-ரொப்பாய் காதலித்தால் என்ன, ஜோசியம்/ஜோசியர் காதலிக்கக்கூடாது என்றால் காதலிக்கக்கூடாதுதான்...இல்லையெனில் பெரும் பாரதூரமான் விளைவுகள் உருவாகும், அத்றகு முக்கிய உதாரணமே ஷ்ரேயாவின் கண்ணில் வரும் கிளிசரின் கண்ணீர்த்துளிகள் (அல்லது தமிழ்க் கலாசாரத்தின் கறுப்புத்துளிகள் எனவும் சொல்லலாம்)
ஷ்ரேயா மெல்லிய நீல சேலையில் அழகாக இருக்கின்றார். ஆகவே இனி அனைத்துத் தமிழ்ப்பெண்களும் மெல்லிய நீல நிற சாறியைத் நமது தமிழ் அடையாளக் கலராக ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை....அது see-throughவாய் இருக்கவேண்டும். பின் பக்க blouse, emptyஆக இருத்தல் விருப்பத்தக்கது. எனெனில் பிறகு தொப்புளுக்கு ஒரு நீதி தமக்கு ஒரு நீதியா என முதுகு கோபிக்கக்கூடும்.
ஷ்ரேயாவுக்கு காதல் வரும் காட்சியில் ரெயினுக்கும் முன் சிவாஜி சாரின் கால் (ஓமொன்று சொல் இல்லாட்டி தற்கொலை என்ற சபதத்தின்படி)தண்டவாளத்தில் சிக்குகிறது. அந்தப்பெரிய உருப்படியைக் கண்டு நிற்பாட்டமுடியாத வண்டலூர் ரெயின் ஷ்ரேயா தன் தாவணியைத் தூக்கிப்போட்டு blouse யோடு ஓடும்போது மட்டும் நிற்கிறது (ஆகவே அந்த ரெயின் ஒரு ஆண் என்பது நிரூபணமாகிறது). அப்படியே குனிந்து நிற்கும் ஷ்ரேயாவை கமரா மேலிருந்து தன் கலைத்தாகத்தோடு படம் எடுக்கிறது இந்நூற்றாண்டில் தவறவிடக்கூடாத நூறு ஒளிப்படங்களில் ஒன்றென ரைம்ஸில் வரக்கூடிய அரிய காட்சி அது.
தொப்புள் காட்டாவிட்டால் தமிழ் ஆண்கள் டூயட் பாடமாட்டார்கள் என்பதால் தொப்புளைக் காட்டாமல் ஒருபாட்டும் ஷ்ரேயா ஆடிவிடவில்லை.. அவ்வப்போது தடாகத்தில் மெல்லிய ஆடைகளுடன் நீந்தவும் செய்கிறார். ஆனால் தலை துவட்டும் காட்சியைக் காணவில்லை. அவருக்கு 'ஜலதோசம்' பிடித்துவிடுமே என்று படம் முடியும்வரை உங்கள் உள்ளம் -என்னைப்போல அதிர்ந்தால் - நீங்கள் ஒரு மனிதாபிமானமுள்ள தமிழ் ஆண் என்பது உறுதிப்படுத்தப்படும்..
இடைவெளிக்குப் பின் நெடும் நேரமாய் ஷ்ரேயாவைக் காணவில்லை. சிலவேளை ஸ்கிரினிலிருந்து வெளியே வந்து ஒய்வெடுக்க அரங்கின் இருக்கையில் எங்காவது இருக்கின்றாரோயெனத் தேடத்தொடங்கினேன். மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் சேலை கட்டியிருக்கவில்லை என்பதாலும் தொப்புளின் பரப்பை வெளியே பறைசாற்றிக்கொண்டிருக்காததாலும் அவர்கள் தமிழ்ப்பெண்களாக இருக்கச் சாத்தியமில்லை. (ஆனால் தமிழில் கசமுசாவென்று கதைத்துக்கொண்டிருந்தார்கள்).
சிவாஜியின் laptop சிபிஜக்கு காட்டிக்கொடுத்து சின்னத்திரை வில்லி மாதிரி வந்து ஷ்ரேயா ஒருகாட்சியில் கண்ணீர் வடிக்கிறார். அப்போது மட்டும் அவரது இடுப்பு தாவணியால் மறைக்கப்பட்டிருந்தது.
இறுதிக்காட்சியில் ஷ்ரேயா ஸ்கிரினில் hi hi (or bye bye) என கையைக்காட்டுகிறார். மூன்று மணித்தியாலமாய் தமிழ்க் கலைத்தாகம் கொண்ட ஒரு படத்தைப் பார்த்த்தால் கையில் வைத்திருந்த ஆறு ரிக்கெட்டுக்களை ரென்சனின் சுக்குநூறாக கிழித்திருந்தது கூட எனக்குத் தெரியவில்லை என்பதில் இந்தப்படத்தின் அருமை பெருமை உங்களுக்குப் புரியும். அருமையான படத்தில் அற்புதமாய் நடித்த ஷ்ரேயாவுக்கு அந்த கடதாசித்துண்டுகளை ஸ்கிரினை நோக்கி எறிந்து எனது அன்பைக் காணிக்கையாக்கினேன்.
------------------
நானாவது பரவாயில்லை, எனக்கு ஓசியில் ride கொடுத்து ஓசியில் ரிக்கெட்டும் எடுத்துத் தந்த நண்பனுக்கு எப்படியிருக்கும்? அவனுக்காகவே இந்தப்பதிவு சமர்ப்...பணம்!
தோழா, ஷ்ரேயா போல ஒரு தமிழ்ப்பெண் உனக்குக் கிடைக்க கடவுக.
------------------
சிவாஜி சாருக்கு அவனவன் பாலாபிஷேகம், பூந்தி இலட்டு அபிஷேகம், நடுரோட்டில் ஆடறுத்து ரத்தாபிஷேகம் என்று செய்யும்போது, நம் தமிழ்ப்பெண் ஷ்ரேயாவிற்கு என்னாளானது... ஒரு பெங்குவின் ஆட்டம்!
.
27 comments:
நல்ல விமர்சனம். தமிழ்ப் பெண்மைக்கு இலக்கணம் எழுதியிருக்கும் ஷ்ரேயா அண்ணி வாழ்க.. அடுத்த கொ.ப.செ உருவாகறா மாதிரி தெரியுது.. தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாத்தணும்.
இதைப் பற்றி எழுத எனக்கும் கொஞ்சம் இருக்கிறது - வருகிறேன். இங்கேயோ இல்லை என் பதிவிலேயோ.
டிசே,
பெங்குயினாட்டம் பேஷ் பேஷ்... மத்தபடி அண்ணி ஸ்ரேயாவை நக்கலடித்தமைக்கு உம்மை ஆபீஸ் ரூமுக்குக் கூட்டிப் போக ஆள் வருதாம் ;)
தண்டவாளத்துல ரஜினி நின்ன அன்னைக்கு மட்டும் ஷ்ரேயா பச்சை தாவணி கட்டி இருந்தா நிலைமை என்னாகி இருக்கும்?
ஜோதில நீங்களும் ஐக்கியமா ..கலக்கல் விமர்சனம்
சிரேயாவ பாத்திட்டு அசின கொஞ்ச நாளைக்கு ஓரங்கட்டுற எண்ணம் ஏதும் வரலியே உங்களுக்கு?
:)
//மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது//
:-)
அதானே பாத்தேன் எங்கடா நம்ம டிசே-ய காணோமேன்னு?
//மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது//
:-)
அதானே பாத்தேன் எங்கடா நம்ம டிசே-ய காணோமேன்னு?
கூர்மயான கண்ணுப்பா உனக்கு.
அப்படியே குனிந்து நிற்கும் ஷ்ரேயாவை கமரா மேலிருந்து தன் கலைத்தாகத்தோடு படம் எடுக்கிறது
இது கமராவின் தாகமா? சங்கரின் தாகமா?
டிசே சார் ..தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்கிறாங்களே.. இப்ப புரியுதுங்க தொப்புளை காட்டுறதை அதுங்களை ரசிக்கிறது தானுங்களா நன்றிங்க
//தண்டவாளத்துல ரஜினி நின்ன அன்னைக்கு மட்டும் ஷ்ரேயா பச்சை தாவணி கட்டி இருந்தா நிலைமை என்னாகி இருக்கும்?//
அதுதானே..?
நன்றி நண்பர்களே.
....
/தண்டவாளத்துல ரஜினி நின்ன அன்னைக்கு மட்டும் ஷ்ரேயா பச்சை தாவணி கட்டி இருந்தா நிலைமை என்னாகி இருக்கும்?/
ரவிசங்கர், வேறு என்ன நடக்கப்போகிறது...?, அந்தக் காட்சியிலிருந்து சிவாஜிக்குப் பதிலாக எம்ஜிஆர் வந்து எங்களுக்குப் பூச்சாண்டி காட்டியிருப்பார் :-).
.....
/சிரேயாவ பாத்திட்டு அசின கொஞ்ச நாளைக்கு ஓரங்கட்டுற எண்ணம் ஏதும் வரலியே உங்களுக்கு?/
அய்யனார், நானெல்லாம் hardcore அஸின் 'விசிறி'யாக்கும். அதனால்தான் இங்கே ஷ்ரேயா படம் ஒன்றுகூடப்போடவில்லை. இது மட்டும் அஸின் நடித்திருந்ததாக இருந்திருந்தால், ஒவ்வொரு பந்திக்கும் இடையிலும் அஸின் சிரித்துக்கொண்டிருந்திருப்பார்.
....
முபாரக், நீங்களும் என்னை மாதிரி ஷ்ரேயாவை அரங்கில் தேடினீர்களா; :-)?
......
/இது கமராவின் தாகமா? சங்கரின் தாகமா?/
அநாமதேய நண்பர், சங்கரின் தாகத்தைத்தனே ஜென்டில்மென் படத்தில் சுபாசிறியின் பாத்திரத்திலிருந்து பார்த்துக்கொண்டே வருகின்றோம். அவருக்கு இன்னும் 'கலைத்தாகம்' தீரவில்லையா என்ன?
........
/தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்கிறாங்களே.. இப்ப புரியுதுங்க தொப்புளை காட்டுறதை அதுங்களை ரசிக்கிறது தானுங்களா நன்றிங்க/
மதராஸி சார், இப்படி தொப்புளைப் பார்க்கும்போதாவது உங்களுக்கும், (எனக்கும்) தொப்பூள் கொடி உறவுகளின் நிலை நினைவுக்கு வருகின்றது என்பது என்னவோ நல்லதுதான். சிவாஜி சாருக்கு பெண் தேடிக்கொண்டிருக்கும்போது விவேக் சார் சொல்லுவார், இங்கும் பெண் இல்லாட்டி யாழ்ப்பாணத்துக்குப் போய்ப் பார்ப்போம் என்று. எனக்கு என்ன சந்தேகம் என்றால், ரஜினி சார், எதோ ஒரு விழாவில் ஈழத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரக்கர்கள் என்பதால் அனுமான் எரித்தான் என்றமாதிரியொரு 'இராமயணக்காட்சியைச் செப்பியிருந்தார். அப்படியென்றால் எப்படி நம்ம சிவாஜி சார் அரக்கரின் வம்சத்தில் வந்த பெண்டிரைக் 'கடி'மணம் புரிவார்? சிலவேளை கோத்தபாய (ராஜபக்ஷ) மாத்தையா வட இந்திய லடுக்கிகளை இமயமலையோடு பெயர்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இப்போது வைத்துவிட்டாரோ தெரியாது.
இவ்வாறே எங்கள் தமிழ் இங்கு கோலோச்சட்டும்.
தாய்மொழியைக்கூடச் சரியாகப் பேசவோ எழுதவோ தெரியாதவனின் படம் இப்படித்தான் இருக்கும்.
இது அந்த மூடர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது.
சாரு நிவேதிதா 'சிவாஜி'' குறித்தொரு கட்டுரை எழுதியுள்ளார்: http://www.charuonline.com/kp243.html
சிவாஜி படம் மற்றும் சங்கர் குறித்தெல்லாம் சாரு குறிப்பிடுவது உடன்படக்கூடிய புள்ளிகள்...
கமலிற்கொரு elite இடம் ஒதுக்கப்பட்டுவிட்ட்து என்பதை ஒரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், -- (சாரு குறிப்பிடுவதைப்போன்று) --கமலைப்போலவன்றி ரஜினி அவரது படங்களைப் பற்றி எவரும் விமர்சனபூர்வமாய் உரையாடும் வெளியை கொடுக்கின்றாரா என்பதும் கேள்விக்குரியதே. இருவரிடமும் -அருகிலிருப்பவர்கள்- மனந்திறந்து அவர்களின் படங்கள் குறித்து பேசமுடியாத ஒரு சூழ்நிலையைத்தான் அவர்களோ அல்லது மீடியாக்களோ உருவாக்கியிருக்கின்றன/ர் என்றே நினைக்கின்றேன்.. ரஜினியின் 'தனித்தன்மைகள்/பெருங்குணங்கள்' என்று சாரு பட்டியலிட்டதைவிட, எனக்கென்னவோ ரஜினிக்கு பிறரைவிட தன் பலவீனங்கள் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியும் என்பதால்தான் நிலைத்து நிற்கின்றார் போலத் தோன்றுகின்றது.
சாரு ஒரு சைக்கோங்க.... அதுன்ரை அல்லாம் ஒறு கறுத்து என்று போடுறீங்களா...
அநாமதேய நண்பர் & மதராஸி:
ரஜினியோ, சாருவோ யாரென்றாலும் அவர்களின் படங்கள்/படைப்புக்கள் ஊடாக விமர்சிப்போமே..... ஒற்றை வரிகளால் -முடிந்த முடிவுகளால்- விமர்சிப்பதால் சாதிக்கப்போவது எதுவுமேயில்லை; நாம் கூறவிரும்பும் விடயங்கள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமுடியாது போய்விடும். நன்றி.
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தமிழ்த்தாய் ஷ்ரேயா வாழ்க !!!!
தங்களின் ரசனையோ ரசனை. அடடாhh எப்பிடி இதெல்லாம்.
நளாயினி,தமிழனாய் இருந்துகொண்டு இப்படிக்கூட சிந்திக்காட்டி, இருந்தும் என்ன பயன் :-)?
வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
நன்றி சுரதா.
/பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்./
இந்த பகிடிதானே வேண்டாம் என்கிறது :-).
:)
I think this movie mainly consern about black money middle love and comady is for cormacial tricks
so why compare tamil culture and about tamil womens and girls
i think you have planty free time so please do some good tamil articals
Cinema can tell many things but we don't need to carry all the stupid thinks
Life like to be annappattsi life example
what i feel i wrote I am not cinema fan but when ever i had free time i watch all the movie
Thanks
Guna
"எனெனில் பிறகு தொப்புளுக்கு ஒரு நீதி தமக்கு ஒரு நீதியா என முதுகு கோபிக்கக்கூடும்"
:-))
மீண்டும் துவங்கிட்டிங்களோன்னு பாத்தேன்.
ஸரேயா? வடிவேலுடன் ஆட 40 லட்சம்வரை கேட்டதாக சொல்கிறார்கள். எல்லாம் இப்படி ஏத்தி ஒட்ட ரேட்டுதானா? நல்லா இருங்க.
சிரித்துக் கொண்டே படித்தேன் :)
சரி, டி.சே. தமிழன் சார், அது என்ன சிவாஜி சார்.? ரஜினி சார் தெரியும் (எஸ்.ராமகிருஷ்ணன்).
நன்றி நண்பர்களே.
...
சுந்தர்: எஸ்ரா, சார் போட்டுத்தான் இலட்சமோ/கோடியோ நன்கொடையாக ரஜினிடமிருந்து பெற்றார் என சாரு ஒருமுறை எழுதியிருந்தார் (வதந்தியாகவும் இருக்கலாம்). அப்படியேதாவது எனக்கும் குபேரன் கூரையைத் திறந்து கொட்டிட மாட்டாரோ என்ற நப்பாசைதான் :-).
Post a Comment